திருச்செந்தூர் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா சென்ற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா தொடங்கிய காலத்தில் இருந்து தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

9-ம் திருநாளான நேற்றிரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 

மாசித்திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று  காலை 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக ரத வீதியில் வரும், இதனைக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE