வரும் 16-ந் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

By

திருமலை திருப்பதியில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது கோயில் நிர்வாகம். மேலும், சுவாமியை தரிசிக்க 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இலவச தரிசன டிக்கெட்டுகலையும் ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சுவாமியை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ம் தேதி முதல் தினந்தோறும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவாஸ்தானம் அறிவித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE