வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை

By

சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கோயில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதனால் பலர் கோயிலுக்கு சென்று நேரடியாக கும்பாபிஷேக விழாவை பார்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிடடு கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் யாகத்தில் பங்கேற்கின்றனர். இன்று யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும், நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயில் நிர்வாகத்தின் சார்பாக சமூக தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்படு செய்யப்பட்டுள்ளன.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE