அதாவது பிரளய காலம், பிரம்மனும், அவ ரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசி களும் அழிந்து விட்டன. உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் எல்லையில்லா கருணை யுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடை விடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவ ர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்திய டையவேண்டும் என்று பிரார்த்தித்தார்.
இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
சிவராத்திரி அன்று விரதம் மேற்கொள்ப வர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையை செய்து, முடிக்க முடியாதவர்கள் கோயிலுக் குச் சென்று, அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக் க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கு ம் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணி ந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந் து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் தொடக்க வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களா ன பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலு க்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களு க்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங் களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறு நாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரி க்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல் லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியா மல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவ ங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலா ம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெ ல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலு ம் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கா ன பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவ மேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்தானம் செய்வது ஆகிய அனைத்தை யும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற்கு ஈடாகாது.
சிவராத்திரி விசேசமானது ஏன்?
நமது நாட்டு விரதங்களில் இந்து சமயத் தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் நவராத்திரி, சிவராத்திரி என்ற இரண்டு ராத்திரிகளுமே விசேசமாகக் கொண்டா டப்படுகிறது. முன்னது அம்பிக்கையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண் டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
ராத்திரி என்பது என்ன?
ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகி றோம். அப்படி உறங்கி எழுந்ஙதால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதி ல்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்த வரன். தூக்க மாம் ஆனால் அளவு கடந்தும் தூங்கக் கூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்தி ற்குப் பெயர்.
எதனால் தூக்கம் வருகிறது? இந்த தூக்கம் அவசியம்தானா? என்று விசாரித்த சிலர் இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையா தது என்ற முடிவிற்கு வந்தனர். தூக்கத்தி ல் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.
“பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழ ந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவ னை அணைத்து அருகில் அமர்த்துகின் றான். அச்சமயம் கண்காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்து பின் கூறுகிறோம்.
அச்சமயம் நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்ணுலகம் விண்ணுலகம் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவ து தைனந்தினப்பிரளயம் என்படும்.
நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகி றது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்து சக்தி யை அளிப்பதற்காக சிவன் தனக்குள் லய ப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும் புரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.
பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்க ப் பொடிகள் உருத் தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்தி ருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி, என் றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டா னைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக் ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்க ளை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக் கினால் தங்கம் தனியே வருவது போல் சிரு ஷ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மா விற்கு ஏற்றபடி உடல் எடுக்கி றார்கள்.
அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும் அன்று சிவனை த் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள்.
நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தின த்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து, இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி, தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அப்படியே வரம் தந்தார்.
விஸ்ணு அலங்காரப்பரியன் என்றும் சிவன் அபிசேகப்ரியன் என்றும் சொல்வார்கள்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய் யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும் சகல நன்மைக ளும் உண்டாகும்.