தன்வந்திரி பகவான்....

By செய்திப்பிரிவு

நம்பிக்கை இருந்தால் அதுவே யானை பலம் தரும். எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் இறைவனையே சரணடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் தீர்வு கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.

மருத்துவம், அறிவியலால் முடியாத பல மருத்துவ அற்புதங்களை பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளன. இது மதங்களை தாண்டிய நம்பிக்கை என்பதை யாருமே மறுக்க முடியாது. மருத்துவர்கள் கை விரித்தாலும் நாம் நம்பும் கடவுள் நம்மைக் கைவிடுவது இல்லை. மருத்துவம் கைவிட்ட நிலையில் நம்முடைய கடைசி நம்பிக்கையாக ஆன்மிகம் இருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையின் கடவுளாக தன்வந்திரி வணங்கப்படுகிறார். 

மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து தோன்றியவர். பாற்கடலை கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கையில் அமிர்த கலசத்தை ஏந்திய தன்வந்திரி வெளிவந்தார்.

தினமும் தன்வந்திரி மந்திரத்தை உச்சரித்து, அவரை வணங்கி வந்தால், நோய் அச்சம் நம்மை விட்டு விலகும். அச்சங்களும், நோய்கள் விலகி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெருகும். அதற்கு சில சுலபமான மந்திரங்கள் உள்ளன.

மந்திரம்: 

ஓம் நமோ பகவதே! 
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!

என்பது தான் தன்வந்திரியின் அருளை பெற்று நோயற்ற வாழ்வைத் தரும் மந்திரம். சரி, மந்திரத்தின் பொருளை தெரிந்துக் கொண்டு அதை உச்சரித்தால் பலன் முழுமையாக கைகூடும்.

கையில் அமிர்த கலசத்தை ஏந்தியிருக்கும் வாசுதேவனே! தன்வந்திரி பகவானே! எல்லா நோய்களுக்கும் மருந்தாக, நோய்களைத் தீர்ப்பவராக இருக்குக்ம் தன்வந்திரி பெருமாளே உன்னை வணங்குகிறோம்!!!

மிகவும் ஆற்றல் மிக்க இந்த மந்திரத்தை தினசரி 108 முறை இதை சொனால் கை மேல் பலன் கிடைக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE