ௐ ஶ்ரீ சாய் நாதாய நமஹ!!!

By தேஜஸ்

எல்லா இடங்களிலும் துரதிருஷ்டம் உன்னை துரத்துகிறது. என்று நீ எண்ணுகிறாய். அது முற்றிலும் தவறான எண்ணம். உன்னை விதியும் ஆசைகளும்  இக்கட்டான சூழ்நிலையில் எடுத்த  முடிவுகள் தான் இந்த நிலைக்கு இழுத்து சென்று விட்டன.

கவலை வேண்டாம். எல்லாம் முடிவுறும். நம்பிக்கையோடு செயல்படு. எப்போது என்ன நடக்குமோ என்கிற பயம் உன்னை சூழ்ந்து இருக்கும் வரை உன்னால் நிதானமாக யோசித்து செயல்பட முடியாது. 

முதலில் மனதை ஒரு நிலை படுத்து. மனதில் அமைதி இல்லாமல் நீ எதைச் செய்தாலும் அது சிறப்படையாது. எல்லாரும் உன் உள்ளத்தை காயப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்களே என்று வருந்தாதே. உன் கண்ணீரை வீண் ஆக்காதே. 

உன் தேவை, வலிமை புரியாதவர்களுக்காக நீ வருத்தபடுவதால், உன் மதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை.
நீ அவர்களை பற்றியே யோசித்து  மனம் சோர்வு அடைந்து, உன் லட்சியத்தை நோக்கி முன்னேறி செல்வதில் சுணக்கம் ஆகிறது. 

அப்படிப்பட்டவர்களிடம்  இருந்து நீ சற்று விலகி இருப்பதே உனக்கு நல்லது. அவர்களுக்கு தீமை செய் என்று கூறவில்லை. அவர்களே உன் தேவை அறிந்து உன்னைத் தேடி வரும் பட்சத்தில் நீ உதவி செய். 

மன அமைதி இழந்து நிற்கும் உன் வாழ்க்கை கூடிய விரைவில் மாறும்.  நீ எதிர்பார்த்த நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். தைரியமாக நம்பிக்கையோடு செயல்படு.

நல்லதே நடக்கும். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை .

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE