ஸ்ரீ சாயின் தரிசனம் : உங்களிடம் ஓடோடி வருவேன் 

By தேஜஸ்

எனது கதைகளை வாசிப்பவர்கள், மகிழ்ச்சியும் நிரந்தர திருப்தியும் கொண்டிருப்பார்கள்.

என்னுடைய கதைகளும் உபதேசங்களும் ஒவ்வொரு வீட்டிலும் அனைவரும் படித்து மனதுக்கு ஆறுதலை பெற்று வாழ்வில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் பெறுவார்கள்.

அச்சமோ, வலியோ உங்களிடம் தோன்றும்போது, எனது புத்தகத்தை உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து என் பெயரை உச்சரியுங்கள். உங்களது வேதனைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியும் அமைதியும் பெறுவீர்கள்.

கலியுகத்தில் என் கதைகளை வாசித்து, என் புகழைக் கேட்டு என் பெயரை உச்சரித்தால் வாழ்வில் மகிழ்ச்சியையும் இறப்பில் முக்தியையும் பெறுவீர்கள். எனது கதைகளை வாசிப்பதென்பது என்னுள் இருப்பதற்கு சமம்.

 என் கதைகள் உங்களின் மனதை தூய்மைப்படுத்தி உங்கள் குணத்தை மேம்படுத்தும். நோயின் தாக்கத்தில் இருந்தும், மரண வாசலில் இருந்தும் கூட எனது அன்பு உங்களை காப்பாற்றும்.

என் கதைகளை  தினந்தோறும் ஒவ்வொரு அத்தியாயமாக படித்து மனதில் பதிய வைத்தால்  நேர்மையும், தானமும் கொண்ட வாழ்வை வாழ்வீர்கள்.

நீங்கள் செல்லும் எந்தப் பாதைகளும் எனது அன்பு ஒளியைத் தரும். எந்த இருட்டையும் கருமேகத்தையும் நீக்கி ஒளியைத் தரும்.

எனது சொற்களின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடன் எப்போதும் இருக்கிறேன். உங்கள் மனதில் வாழ்கிறேன். என்னை நாடி அன்புடன் அழைத்தால் உங்களிடம் ஓடோடி வருவேன், என்னுடைய குழந்தைகளே!

ஸ்ரீ சாயி தரிசனம் தொடரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE