ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம் என்பது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஆகும். புத்திரகாமேஷ்டி யாகம் என்பது குழந்தைப் பேறு வேண்டி செய்யப்படும் யாகம் ஆகும். இது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் யாகங்களில் ஒன்றாகும். இந்த யாகத்தினை செய்தால், அதன் பலனாக குழந்தை பேரு கிடைக்கும் நம்பிக்கை. இந்து சமய புராணமான இராமாயணத்தில் இதைப் பற்றிய குறிப்பு உண்டு.இராமனின் தந்தையான தசரதர் குழந்தைப் பேறின்றி இருந்த போது, இந்த யாகத்தை நடத்தி, ராமர் உள்ளிட்ட நான்கு குழந்தைகளைப் பெற்றார் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.
தற்காலத்தில் இந்த யாகத்தினை பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் செய்வதில்லை. இந்து சமய கோயில்களில் மகா புத்ர காமேஷ்டி ஹோமம் செய்கின்றார்கள். இதில் இதில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்திடத் தடையாக உள்ள பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட பிற தோஷங்கள் நீங்கிடவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றார்கள்.
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.
உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.
இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.
கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன.
இத்தலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாறு குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள் 6 திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
முதல் திங்கள் அன்று விரதம் துவங்கி மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று 6 குழந்தைகளுக்கு அன்னதானம் பரிமாறி விரதம் இருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமை அன்று இங்கு புத்திர காமேட்டீஸ்வரர்க்கு செவ்வரளி பூ மற்றும் பவளமல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்த்த வெண் பொங்கல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
ஆனி மாதம் பௌர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள் புத்திர காமேஷ்டி யாகம் நடத்துவார்கள் அதில் நாம் கலந்து கொண்டால் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும்.