வெள்ளிக் கிழமை விரதம் அதிர்ஷ்டம் தருமா?

By தேஜஸ்

வாரத்தில் நாட்கள் பல வந்தாலும் தெய்வீகமான நாள் என- நம் மனதில் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை.
மற்ற நாளில் சிறிது சோர்வாக இருந்தாலும் - புத்துணர்ச்சி மனதில் எழ- மனமும் வீடும் தூய்மைப்படுத்தி தெய்வத்தை வேண்டுகின்ற ஒரு அற்புத நாள் வெள்ளிகிழமை.

வீட்டிலே குழப்பத்திற்கான காரணம் பலவாயினும் அனைத்தும் விலக ஆண்டவனை தேடுகின்ற நாளும் வெள்ளிக்கிழமை.

வாரக்கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் பவனி வரும் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதும் நம்பிக்கை.

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

காயத்ரிமந்திரம்
ஓம் பூர் புவஸ்வஹ
தத்ஸ விதூர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன ப்ரசோதயாத்*
காயத்ரிமந்திரம் வீட்டில் ஒலித் தால் போதும் .வாழ்கின்ற வாழ்க்கை முழுதும் காரியம் ஜெயமாகும் .

விரதம் இருக்கும் முறை
வெள்ளி கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

வெள்ளி கிழமையில் செய்ய வேண்டியவைகள்
1. கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும். வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில்
2. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.
3. வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும். அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.

4. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
5. வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

6. பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு.

7. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE