திருப்பதி வெங்கடாஜலபதி பணக்கார கடவுள் என்று அனைவரும் நினைக்கும் வண்ணம் அமைந்துள்ளார். கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற நாடு கடந்து சென்று தரிசித்து வருகின்றனர். அனைவரும் கோவிந்தன் என்று அழைக்கும் திருப்பதி ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சில ரகசியம் அடங்கியுள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
⭐ சிலாதோரணம் என்ற அபு ர்வ பாறைகள் திருப்பதியில் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் திருப்பதியில் மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
⭐ ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பு ரம் சாத்துகிறார்கள். பச்சைக்கற்பு ரம் அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த கற்பு ரத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்து விடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பு ரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.
⭐ எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.
⭐ எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பளபளப்பாக இருக்கின்றன.
⭐ ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சு டாகக்கொதிக்கின்றன.
⭐ திருப்பதி ஏழுமலையான் சிலை எந்த ஒரு கடவுள் சிலைக்கும் இல்லாத தனி சிறப்பு கொண்டு உள்ளது.