புரட்டாசி மாதத்தில் என்ன செய்ய கூடாது?

By நந்தா

 புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை.

அதே போல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள். பெருமாளுக்கு உகந்த மாதம், 15 நாட்கள் மகாளய பட்சம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விட்டனர்.

எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை.

புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர். வளைகாப்பு செய்யலாம்.

புரட்டாசி மாத பிறப்பு

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது. தெய்வீக வழிபாட்டிற்கு உரிய இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை.

பண்டிகை காலங்கள்

பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

வாஸ்து செய்யலாமா?

புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது. வாஸ்து பகவான் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும். அதேபோல இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது.

சுபகாரியம் செய்ய ஏற்ற மாதங்கள்
சுப காரியங்களை சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

வீடு குடியேறக்கூடாது
ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். முன்னோர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு தொந்தரவு இல்லைதானே.

புரட்டாசி என்ன செய்யலாம்
கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி வரும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். அது ஒருநாள் பண்டிகைதான் முடிந்து விடும். அதேபோல புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் இதனால் பாதிப்பு எதுவும் வருவதில்லை. இந்த மாதம் செப்டம்பர் 25 மற்றும் 26 மட்டுமே நல்ல நாட்கள் உள்ளது அவசியமானால் சில சுபகாரியங்களை மட்டும் செய்யலாம். இந்த மாதம் திருமணம், சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள் இல்லை.

புதிய தொழில் தொடங்கலாம்
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை நாளின் கடைசி நாளான விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். வாழ்க்கைக்கும் பயன்படும். அதேபோல விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம் மேன்மேலும் வளரும்.

புரட்டாசியில் திருமணம்
புரட்டாசியில் சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம். கன்னி புதனுடையது. தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள். ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம்தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாளய பட்சம், நவராத்திரி பண்டிகைகள் வரும் காலம் என்பதால் பொதுவாக புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்து வந்தனர்.

புரட்டாசி மாத பெருமாளுக்கு விரதம் இருங்கள்..மகாலட்சுமியின் மனம் குளிரும்.. செல்வம் பெருகும்!
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும். அன்னை மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது இது கன்னி மாதம். கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே.
புண்ணியம் மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

நவராத்திரி பண்டிகை விரதம்
புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடல் வலிமை அதிகரிக்கும் விநாயகர் விரதம்
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

எமபயம் போக்கும் விரதம்
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

புரட்டாசி பவுர்ணமி விரதம்
புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
மனம் குளிரும் மகாலட்சுமி
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து மாலையில் படையல் போட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பெருமாளின் அருள் நிச்சயம் கிடைக்கும். பெருமாள் படத்தின் முன்பாக வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் படைக்கலாம். பூஜையில் துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும். மாவிளக்கு போட வேண்டும். வழக்கம் போல் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும்.

அனைவரும் கோவிந்தா நாமத்தை உச்சரிக்க வேண்டும். சாமி கும்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் சாப்பிட வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கு அன்னதானம் அளிக்கலாம். விரதம் முடிந்தவுடன் மாலை பெருமாள் கோயிலுக்கு கட்டாயம் சென்று வர வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் அன்னை மகாலட்சுமியின் அருளால் நம்முடைய செல்வ வளம் பெருகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE