சஞ்சீவ பெருமாள் கோவில், கோபிசெட்டிபாளையம்

By நந்தா

நம்ம கோபிசெட்டிபாளையம் அருகில் இப்படி ஒரு கோவிலா?

 

ஏழுமலையானை தரிக்க திருப்பதிதான் செல்ல வேண்டியது இல்லைங்க.

 

சஞ்சீவராயன் மலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 15 km தொலைவில் அத்தாணி வரப்பள்ளம் அருகில் அமைந்துள்ள கோவில் சஞ்சீவ பெருமாள் கோவில்.

 

30 படிக்கட்டுகள் ஏறினால் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சஞ்சீவ பெருமாளாக காட்சி தருகிறார் விஷ்ணு பரமாத்மா இயற்கையாக உருவான மலை பெருமாளாக உருவானதாக வரலாறு சொல்கிறது.

 

மலை உச்சியில் படிகட்டு வழியாக ஏறினால் திருப்பதி ஏழுமலையான் வெங்கடேச பெருமாளாக பெரிய உருவத்தில் காட்சி தருகிறார் மேலும் மலை உச்சிக்கு செல்லும் வழியில் நவகிரகங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் தரிசனம் செய்தபடி இயற்கை அழகை இரசித்தபடி சஞ்சீவரான் மலை எனும் சிறு குன்றில் உச்சியில் சரபேஸ்வரர் 

பிரஹலாதன் அருகில் உக்கிர நரசிம்மர் கண்டுகளிக்கலாம் மலையில் மேல் இருந்து பச்சை பசேல் என இருக்கும் தென்னை தோப்புகள் வயல்வெளிகள் காண கண் கோடி வேண்டும்.

 

காலை பூஜைகள் தொடங்கி 11 மணிவரை கோவில் திறந்து இருக்கும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் ..

புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமை & ஏகாதசி விசேஷ நாட்கள் ஆகும்.

 

பஸ் போக்குவரத்து அதிகமாக இல்லை கோபியில் இருந்து 16A

பஸ் உள்ளது மற்றபடி இருசக்கர நான்ங்கு சக்கர வாகனங்களில் வருவது உத்தமம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE