வாமன ஏகாதசி!

By சரவணன்

பார்ஸ்வ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாட லில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாத சியை பரிவர்த்தினி (அல்லது) வாமன ஏகாதசி என்றும் கூறுவர்.

மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ண ரிடம் கேட்டார். புரட்டாசி மாத வளர்பிறை யில்  தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும். இதனால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? என்பனவற் றை தயவு செய்து எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்.

பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். "மன்னா, புரட்டாசி, மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பார்ஸ்வ ஏகாதசி."

"இந்த ஏகாதசி மிகவும் மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதா லேயே ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படும்...."

"இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் அடையும் பலனை ஒருவர் வாஜ்பேய யாக த்தை செய்தாலும் அடைய முடியாது. இந்த ஏகாதசியை ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவர் இந்த ஏகாதசியன்று பக்தியுடன் பகவான் வாமன தேவரை வழிபடுபவரை மூவுலகவாசிகளும் வணங்குவர்..."

தாமரை கண்களுடைய பகவான் விஷ்ணு வை. தாமரை மலர் கொண்டு வழிபடுபவர் சந்தேகமின்றி பகவானின் பரமத்தை அடைவார். சயனத்தில் உள்ள பகவான் இந்த ஏகாதசியன்று இடது பக்கத்திலிருந் து வலது பக்கம் திரும்புவார். ஆகையால் பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும்."

யுதிஸ்டிரர் கூறினார்.  "ஜனார்தன! உம்மு டைய விளக்கத்தை கேட்ட பிறகும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. பகவானே எவ்வாறு நீங்கள் சயனிப்பீர்? எவ்வாறு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு திரும்புவீர்? சாதுரமாச விரதத்தை கடைபி டிக்கும் வழிமுறைகள்யாவை?..."
 
"நீங்கள் சயனிக்கும் போது மக்கள் என்ன செய்யவேணடும்? நீங்கள் ஏன் பலி மகா ராஜாவை கயிறுகளால் பிணைத்தீர்கள்? ஓ எனது பகவானே இவற்றையெல்லாம் எனக்கு விளக்கி, என்னுடைய சந்தேகங் களை தீர்த்து வையுங்கள்..."

பகவான் கிருஷ்ணர்  "மன்னா திரேதாயுக த்தில் பலி என்ற என்னுடைய பக்தர் ஒரு வர் இருந்தார். அசுர குடும்பத்தில் தோன் றிய போதிலும் அவர் என்னை வணங்கி, பிரார்த்தித்து வந்தார். அவர் அந்தணர்க ளையும் வணங்கினார். மற்றும் பல யாக ங்களையும் மேற்கொண்டார். விரைவில் அவர் மிக பிரசித்தி பெற்றார்..."

"சுவர்க்க லோக மன்னனான இந்திரனை வென்று சுவர்க்க லோகத்தைக் கைப்பற் றினார். பிறகு இந்திரன், மற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களுடன் என்னை அணுகினர்...."

"அவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி நான் ஒரு குள்ள பிராமணர் உருவெடுத்து, பிரம்மச்சாரி போல் உடைஅணிந்து பலி மகாராஜா  யாகசாலைக்கு சென்றேன் நான் பலி ராஜாவிடம் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டேன்..'

"பலி என்னை மூன்றடி நிலத்தை விட அதிகமாக ஏதேனும் கேட்கும்படி வேண்டி னார். இருப்பினும் நான் கேட்ட மூன்றடி நிலத்திலேயே நான் திருப்தி அடையும் நோக்கத்தை வெளிப்படுத்தினேன்..."

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE