முருகனின் திருவிளையாடல்!

By சரவணன்

செய்யாற்றங்கரையில் இருந்த உத்திரவாஹினி வனத்தில், காசிப முனிவரின ஆஸ்ரமத்திற்கு காவலாக இருந்தார் முருகப்பெருமான். அப்போது  மலையன் மாகரன் வந்தனர். அவர்களுக்க அறிவுரைகளை கூறினார்.

மலையன்  மாகரன் இருவரும் அறிவுரையை ஏற்க மறுத்தனர்.  சக்தி மிக்க ஆயுதம் வேண்டி சிவபெருமானை பார்வதி தாயாரை வேண்டினார்.

சிவபெருமான் வாளை கொடுத்தார், சிவபெருமானும் அன்னையும் சேர்ந்து வேலை கொடுத்தனர்.
காசிபரின் ஆஸ்ரமத்தின் கிழக்கு வாசலில் வேலை காவலாக இருக்க ஊன்றினார்.
மறுபடியும் மலையன்  மாகரன் வந்தனர்.

முருகப்பெருமான் இருவரோடும் போரிட்டார். சிவபெருமானின் வாளால் மகரனின் தலையை துண்டாக்கினார். 

மகரனின் உடல் உயிரற்று தரையில் விழுந்தது. மகரனை போரில் தோற்கடிக்கப்பட்ட இடம் மகரல் ஆகும்.

உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் உள்ளது மாகரல் . மலையன் மந்திரங்களை பயன்படுத்தி  அங்கே இருந்து தப்பித்து சென்றான். ஸ்ரீ முருகப்பெருமான் மலையனை
தேடிச்சென்று அவரை போருக்கு அழைத்தார்.

தனது வேலைக்கொண்டு மலையனின் தலையை கொய்தார். தலை விழுந்த இடம் மலையன்குளம். மலையான்குளம் உத்திரமேரூரில் இருந்து 20km தொலைவில் உள்ளது. வேல் விழுந்த இடம் இளையனார் வேலூர் ஆகும்.

அங்கேயே வேலை நாட்டினார் முருகன். பால சுப்ரமணியராக நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தனியாக அருளுகிறார். யானை வாகனமாக இருக்கிறது.
வேலுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

வள்ளி தெய்வானை இணைந்த உருவமாக கஜவள்ளி இங்கே இருக்கிறார். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் வேல் விழுந்த இடம். முருகனின் வேல் விழுந்த இடம் இளையனார் வேலூர் .  இந்த ஊர் காஞ்சிபுரத்தில் இருந்து 22km. வாலாஜாபாத்தில் இருந்து 9kmல் இருக்கிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE