கோயில் வகை முருகன் கோயில்
மூலவர் ஞானஸ்கந்தர் ,குருநாதர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
முகவரி ஸ்ரீ கந்தாஸ்ரமம் , சேலம்.
ஊர் உடையாபட்டி
மாவட்டம் சேலம் . -
மாநிலம் தமிழ்நாடு.
கோயில் சிறப்பு:
16 அடி உயர தத்ராத்ரேய பகவான் உள்ளார் சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.
முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்,முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது.அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள்.
முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் எனஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர் புவனேஸ்வரி முருகன் சன்னிதானத்தில் உள்ளது.
வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.