அது மட்டுமில்லாமல் நாளை விநாயகருக்கு உரிய சதுர்த்தி திரியும் இருக்கிறது. ஆக மொத்தம் 3 சக்தி வாய்ந்த வழிபாடுகளை நாளை நாம் மேற்கொள்ள வேண்டும். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு, நாகர் வழிபாடு, இந்த மூன்று வழிபாட்டை பற்றியும் விரிவான தகவலை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு
நாளைய தினம் குறிப்பாக பெண்களுக்கு விசேஷமான நாள். திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பெண்கள், திருமணம் ஆன பெண்கள் கடைசி வரை கணவரோடு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ, நாளைய தினம் கட்டாயம் அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். நாளை உங்கள் வீட்டின் அருகில் அம்மன் கோவில் இருந்தால், அந்த கோவிலில் அம்மனுக்கு வளைகாப்பு விசேஷம் சிறப்பாக நடைபெறும்.
இன்று மாலையே உங்களால் முடிந்த கண்ணாடி வளையல்களை வாங்கிக் கொண்டு போய் அம்மன் கோவில்களில் கொடுத்து விடுங்கள். வளையல் அலங்காரம் முன்கூட்டியே நடைபெறும் என்பதால் இன்று அம்மன் கோவிலுக்கு உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை, வேண்டுதல் வைத்து கோவிலுக்காக அம்பாளுக்காக உங்கள் கைகளால் வாங்கி கொடுங்க. அடுத்த வருடத்திற்குள் நீங்கள் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும்.
வளையல் மட்டும் தானா அம்மனுக்கு நாளைய தினம் வாங்கி கொடுக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் சந்தனம் பன்னீர் மல்லிகைப்பூ என்று அம்மன் அலங்காரத்திற்கு தேவையான சகல விதமான மங்களப் பொருட்களையும் நாளைய தினம் வாங்கி அம்பாள் கோவிலுக்கு கொடுத்து வேண்டிக் கொள்ளுங்கள். அம்மன் கோவில் அர்ச்சகரிடம் கேளுங்கள். அம்மன் அலங்காததற்கு வேறு என்ன பொருட்கள் தேவை என்று. வளையலை தவிர வேறு ஏதாவது மங்களப் பொருட்களை அர்ச்சகர் கேட்டாலும் வாங்கி கொடுக்கலாம் தவறு கிடையாது.
அம்மன் சீமந்தத்திற்கு நாளைய தினம் உங்களால் முடிந்த கலைவாய் சாதத்தை கூட பிரசாதமாக சமைத்துக் கொடுக்கலாம். இன்னும் அதிக அற்புதம் வாய்ந்த பலன் கிடைக்கும். வளைகாப்பு நிறைவடைந்த பிறகு அடுத்த நாளோ அல்லது இரண்டு நாள் கழித்தோ, அம்மனுக்கு சாத்திய வளையல்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும் சரி, குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண்களும் சரி, அந்த வளையலை வாங்கி கையில் அணிந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
நாகர்சதுர்த்தி வழிபாடு
நாளைய தினம் நாகர் சதுர்த்தியும் இருக்கிறது. உங்கள் வீட்டு பக்கத்தில் நாகர் சிலை உள்ள கோவில்கள், புற்று உள்ள கோவில்கள், நாகாத்தம்மன் கோவில் ஏது இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு சென்று நாளைய தினம் வழிபாடு செய்வது சர்ப்ப தோஷங்களை விளக்கி வைக்கும். அதிலும் குறிப்பாக நாளை காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய துன்பங்கள் விலகும் நன்மை நடக்கும்.
வளர்பிறை சதுர்த்தி
நாளை வளர்பிறை சதுர்த்தி திதி. விநாயகருக்கு உகந்த நாள். இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்ய செல்வ வளம் உயரும் என்பது நம்பிக்கை. உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை கட்டி, விநாயகருக்கு போடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என்பதும் நம்பிக்கை.
உங்களால் முடியும் என்றால் கடையிலிருந்து லட்டு வாங்கி விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து அந்த லட்டுவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாளைய தினம் விநியோகம் செய்தாலும் செல்வ வளத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலே சொன்ன இந்த மூன்று அதிசக்தி வாய்ந்த வழிபாடுகளும் நாளை தினம் சிறப்பு வாய்ந்தவை. இதில் உங்களால் எந்த வழிபாட்டை செய்ய முடியுமோ அதை செய்து பலன் அடையவும்.
இதில் எதுவுமே உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் சரி, அம்பாளையும் விநாயகரை நாகரையும் மனதார நினைத்து சின்ன சங்கல்பம் வைத்து வழிபாடு செய்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் விலகும்.