திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்!

By தேஜஸ்

இந்தியாவின் ஆதிகால தெய்வங்கள் குறிப்பாக கிராமங்களின் தெய்வங்களாக இருந்தவை மாரியும் காளியும். இரண்டும் பொதுவாக மாரியாத்தா, மகமாயி என கொண்டாடபட்டாலும் இருவருக்கும் நுணுக்கமான வேறுபாடு உண்டு.

ஒரு ஊரின் முதல் தேவை நீராதாரம் அது மழையால் வரும் அதை வழங்குபவள் மாரி, அடுத்த அவசியம் எல்லா வகையிலும் காவல் அதை தருபவள் காளி, இப்படி ஒரே சக்தி இரு அத்தியாவசிய வரங்களை தருவதால் அவர்கள் இரு பெயரில் கொண்டாடபட்டனர்.

இங்கு காளி என்பவள் எல்லையில் நிறுத்தபடுவாள், மாரியம்மன் ஊருக்குள் வழிபாடு பெறுவாள் இது காலத்தால் மூத்த ஏற்பாடு, இதன் பின்பே இதர வழிபாடுகள் வந்தன‌

அப்படி பாண்டிய நாட்டின் மூத்த தெய்வம் இந்த அம்மன், பாண்டிய நாடு முழுக்க முழுக்க அன்னை சக்தி தேவி வழிபாட்டினை கொண்டது, மீனாட்சியம்மன் அங்குதான் அவதரித்தாள். அப்படிபட்ட பாண்டியர்கள் அன்றைய மேற்கு எல்லையில் இன்றைய திண்டுக்கல்லில் இந்த அம்மனை நிறுத்தினார்கள், பாண்டிய நாட்டின் காவல் தெய்வமான அவளுக்கு ராஜராஜேஸ்வரி என பெயர், மன்னர்களால் அவள் வழங்கபட்டவள்
இது முன்னெடுங்காலத்திலே உருவானன ஏற்பாடு, அன்னையினை அங்கு பாண்டியர்களே முதலில் நிறுத்தி காவல் தெய்வமாக வழிபட்டார்கள், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் அவன் சந்ததிகள் காலம் வரை அது நீடித்தது

இந்த அன்னையினை கல்லில் செய்து யாரும் பெயர்க்கமுடியாதபடி மிக இறுக்கமாக அன்றே ஸ்தாபித்து வணங்கினார்கள், விமரிசையான கொண்டாட்டங்கள் அவளுக்கு இருந்திருகின்றன‌

அங்கு பாண்டியர் சிறிய கோட்டை கட்டி அவளை வழிபட்டிருக்கின்றனர், அந்த கோட்டைக்கும் பாண்டிய நாட்டுக்கும் அவள் காவலாய் நின்றிருந்தாள்

அந்த கோட்டையில் பல சுரங்கபாதைகளை பாண்டியர் நிர்மானித்தார்கள் பழனி வரை அந்த சுரங்கம் நீளும், இப்போதும் அது உண்டு

மதுரையில் பாண்டியர் வீழ்ந்து சுல்தானிய ஆட்சி வந்த காலங்களில் இந்த கோட்டையும் கோவிலும் பாழடைய தொடங்கியது பின் நாயக்கர் ஆட்சி வந்த காலங்களில் சிறிய ஆலயம் இருந்திருக்கின்றது

16ம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தானிய ஆட்சி இப்பக்கம் வரை வந்தபோது எல்லாம் பாழ்பட்டிருக்கின்றது, அன்னையின் கோவில் அழிந்து போனது ஆனால் அவள் சிலை மட்டும் நகரவில்லை அதை யாராலும் தொடமுடியவில்லை

பின் வீரசிவாஜியின் ஆட்சியில் இந்த ஆலயம் மீண்டும் துலங்கியிருக்கின்றது, சாம்பாஜியும் இதர மராட்டியர்களும் அதனை வணங்கியிருகின்றார்கள்

ஆனால் சிவாஜியின் இந்துராஜ்ஜியம் மொகலாயருடன் வடக்கே மோதிய காலங்களில் தெற்கே மறுபடியும் ஒரு சுல்தானிய குழப்பம் வந்தது அது ஐதர் அலி

அவன் காலங்களில் இந்த ஆலயம் பாழ்பட்டிருக்கின்றது, பின் திப்பு வந்து இந்த கோட்டையினை மீள கட்டியிருக்கின்றான், அம்மன் வழக்கம் போல் தனித்து கவனிப்பற்று நின்றிருக்கின்றாள்

அந்நேரம் அவன் படைவீரர்கள் அங்கு தங்கி பயிற்சி எடுப்பதும் அணிவகுப்பதும் இதர தயாரிப்புக்களை செய்வதுமாக முகாம் அமைத்திருந்தார்கள், அந்த வீரர்களின் கனவில் வந்து அன்னை தன்னை வெளிபடுத்தினாள்
"நான்  இந்த கோட்டைக்கு சொந்தக்காரி, எனக்கான வழிபாட்டினை தொடங்க வேண்டும்" என அவள் ஆணையிட்டாள், அதன்படி அங்கு சிறிய கோவில் கட்டபட்டது அதற்கான ஒரு மடமும் அமைக்கபட்டது
திப்பு பிஜப்பூர் சுல்தானியத்தை மீள கட்ட எழும்பிய சுல்தான், அவனே இந்த அன்னைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான் அவள் அப்போது காட்டிய உக்கிரம் அப்படியானது

அவன் காலத்தில் இருந்து வழிபாடுகளும் கொண்டாட்டமும் தொ
டங்கிற்று , பாண்டியர் காலத்தில் உருவான அந்த அன்னைதான் இன்றும் அங்கு நிலைகொண்டிருக்கின்றாள், இன்றும் அந்த விக்ரக அடிபாகம் எவ்வளவு ஆழத்தில் புதைத்திருகின்றது என்பது யாருக்கும் தெரியாது

இவளிடம் கேட்டவரம் எதுவும் பொய்த்ததில்லை, எல்லா நோய்களும் அவள் சந்ததியில் தீருகின்றன என்பதால் அவள் அன்றே சக்திவாய்ந்த தெய்வமானாள், எல்லா இடமும் அவள் புகழ் பரவிற்று
கோட்டையின் முன்பே அமைந்திருப்பதால் அவள் கோட்டை மாரியம்மன் என்றானாள்
இந்த கோவிலுக்கு சிறப்பு வாயில்கள் மூன்றும் முன்புற வாசல் அம்மன் புறப்பாட்டுக்கும் பக்தருக்குமானது, பின்புற வாயிகள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் தாமிரத்தாலான‌ கம்பம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி அம்மன் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி உண்டு

வடக்கு பக்கம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சன்னதி  துர்கை சன்னதி உண்டு
காளியின் அம்சமாகவும் கனகதுர்க்கை சாயலிலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் அவளின் கம்பீர அழகை கண்டோர் வாழ்நாளில் அதை மறக்கவே முடியாது
அப்படி ஒரு அழகான கம்பீரமான உருவம் அவளுடையது

எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவை ஏந்தி அவள் நிற்கும் கோலம் பெரும் காவலை தரும்
இந்த அம்மன் கோவிலில் எந்த கோவிலும் இல்லா சிறப்பு ஒன்று உண்டு, அது பெருமாளின் தசவாதரங்களை தேவியின் வடிவில் சொல்வது

அதாவது தேவி பத்து அவதாரங்களிலும் பகவானின் சக்தியாக இருந்தாள் என்பதை இந்த காட்சி சொல்கின்றது இந்த ஆலயத்தில் மாசி திருவிழா இருபது நாட்கள் நடக்கும், அந்த திருவிழாவில்தான் இந்த தசவாதார காட்சி நடக்கும்

அம்மனின் காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி  என எல்லா கோலமும் வரும்
சுருக்கமாக சொன்னால் ஆதிபராசக‌தி எப்படி உலகை படைத்து காத்து வருகின்றாள் என்பதை மிக நுணுக்கமாக சொல்லும் கொண்டாட்டம் இது

இந்த கோவில் பருவகால மாறுதல்களை சூரியனின் இயக்கத்தை துல்லியமாக சொல்லும் ஆலயம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாள்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாள்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடிமீது பட்டு முகத்தில் இறங்கி ஜொலிக்கும் அபூர்வ காட்சி நடைபெறும்

சூரியனின் வடதிசை தென் திசை நகர்வுகளை அளவிடும் நுட்பம் இந்த ஆலயத்தில் உண்டு , அன்னை சூரியனின் இயக்கு சக்தி என்பதை ஆழமாக சொல்லும் காட்சி இங்கு உண்டு
நோய் நொடி நீங்க  மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் பக்தர் இடும் நேர்ச்சையும் சம்பிரதாயமும் இங்கு உண்டு

கொடிஏற்றும் நாளில் அம்மனை குளிரிவிக்க பெண்கள் புனிதநீர் அபிஷேகம் செய்யும் வைபவம் உண்டு
தீச்சட்டி ஏந்தி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் தவறாமல் கிடைக்கும்

முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, உப்பு - மிளகுக் கொட்டுவது, மலர் பந்து சாத்துதல், தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு ஏற்றுதல்  என இங்கு எல்லா வகையிலும் பக்தர்களின் நேர்ச்சையும் காணிக்கையும் நடந்து கொண்டே இருக்கும்

மாசி மாதம் பெரு விழா என்றாலும் ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பூஜை இங்கு பிரசித்தி அது போக மண்டகப்படி விழா, பூக்குழி விழா ஊஞ்சல் உற்சவம், தெப்போற்சவம் என கொண்டாட்டம் அதிகம்
தெப்ப திருவிழாவின்போது மாரியம்மன் சயனகோலத்தில் காட்சியளிப்பாள் இது பாற்கடலில் பரந்தாமன் பள்ளி கொள்வதை சொல்லி அன்னை அவரை இயக்கும் சக்தி என்பதை சொல்லும் தத்துவம்

இந்த அன்னை எல்லா மக்களையும் அரவணைப்பவள் திண்டுக்கல் பக்கம் அவளின் ராஜாங்கமே அவள் திருவிழாவில் வழிபாட்டில் இந்துக்கள் மட்டுமன்றி இஸ்லாமியர் கிறிஸ்வர்களும் திரளாக பங்கேற்பார்கள், அவர்கள் இவளை தங்கள் தாயாக கருதி கொண்டாடுகின்றார்கள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகா சக்திவாய்ந்தவள் என்பதற்கு அங்கு கூடும் லட்சகணக்கான மக்கள் சாட்சி, மாசி திருவிழாவில் 30 லட்சம் மக்கள் திரண்டதாக செய்திகள் உண்டு அந்த அளவு உலகெல்லாம் பக்தர்களை ஈர்த்து காத்து வருபவள்

ஆடிமாதம் அவளை நினைத்து வணங்குதல் நன்று,  அவள் உங்கள் வாழ்விற்கு கோட்டை சுவர் போல் காவலிருப்பாள், தன் காவலுக்குள் உங்களை வைத்து காத்து கொள்வாள், உடல் உள்ள உபாதைகள் தொல்லைகள் எதுவும் உங்களை அணுகாது

அவள் பாண்டிய நாட்டின் காவல் தெய்வமாக வந்தவள் இப்போது தன்னை நம்பும் ஒவ்வொருவரையும் காத்து நிற்கும் கருணைமிக்க மாரியம்மனாக அருள்மழை பொழிபவள், அவளை பணிவோர்க்கு கோட்டை கட்டி ஆளும் பெரும் வரமும் பலமும் அவள் தருவாள்

எல்லா நோய்களையும் தீர்த்து வைப்பதால் அவள் "மகா மருத்துவச்சி"  என கொண்டாடபடும் அந்த அன்னை ஆடிமாதத்தில் எல்லா நலனையும் எல்லா மக்களுக்கும் தன் காவலைதந்து காத்து வரட்டும்

அவளை அண்டி பணிவோர்க்கு ஒரு குறையும் வராது, எந்த குறையென்றாலும் அது தீர்ந்து அவர்கள் நிறைவாழ்வு வாழ்வார்கள் இது சத்தியம்

பிரம்ம ரிஷியார்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE