மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் துவரிமான், மதுரை

By தேஜஸ்

 12 ம் நூற்றண்டில் மதுரையை ஆண்ட, கூன்பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.
 தெற்கு சன்னதியில் சுயம்பு மீனாட்சியம்மன் மூலவராக எழுந்தருளியுள்ளார். கோயில் வெளிப்புற தெற்கு வளாக திசையில் தட்சிணாமூர்த்தியும், வடபகுதியில் துர்க்கைதேவி, நந்தனகணபதி, பைரவர், சூரியன், சந்திரன் சுவாமி சிலைகள் உள்ளன.   

மகாமண்டபத்தில் விநாயகர், முருகன் சுவாமி சிலைகள், மேற்கு நோக்கி லிங்கேத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உண்டு.

புத்திர பாக்கியம், திருமணம், கல்வி, பொருள் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இக்கோயிலில் அமைந்த சுயம்புவான மூலவர் லிங்கம் மேற்கு நோக்கி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நேர் திசையில் அமைந்திருப்பது சிறப்பு.

சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சிவனுக்கு ருத்திரதிருச்சதிபூஜை செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE