திருவாரூரில் உள்ள சக்திபுரம் எனும் ஊரில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது .
சீதளம் என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம் இங்கு வழிபடும் மக்களின் உடல் மற்றும் மன உஷ்ணத்தை போக்கும் தாய் ஆதலால் இவளுக்கு இந்த பெயர் அமைந்திருக்கிறது .
இந்த கோயிலில் எந்த அம்மன் கோயிலிலும் கேள்விபடாத அதிசயம் நடக்கிறது .
இந்த கோயில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரத்தின் இலை இனிக்கிறது .
இனிப்பு என்றால் ஏதோ சாதாரணமான இனிப்பு அல்ல தேன் போன்று இந்த இலை சாறு இனிப்பது அதிசயத்திலும் அதிசயமாக உள்ளது.
பல விதமான ஆராய்ச்சி களுக்கு உட்படுத்தி பார்த்த பிறகும் இதன் காரணம் புரியவில்லை மேலும் இந்த இலையை கோயில் வளாகத்திற்கு வெளியே எடுத்து வந்து சாப்பிட்டால் கசக்கிறது .
அம்பாளின் அருளாகவே இதை பக்தர்கள் கருதுகிறார்கள்.
இந்த கோயிலே பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள அந்த வேப்ப மரத்தின் கீழ் தான் அமைந்துள்ளது .
இந்த தாயாரை வழிபட நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.