குபேரனை கும்பிட்டால் கிடைக்கும்?

By சரவணன்

*பணத்திற்கு அதிபதியாக குபேரனை சாஸ்திரம் கூறுகிறது. 

*திருப்பதி வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்தவர். 

*ஒரு காலத்தில் குபேரன் எவருக்கும் பணத்தைத் தராமல் மூட்டை கட்டி வைத்திருந்தார். இதனால் பாவம் சேர்ந்து தொழு நோய் வந்து விட்டது. தன் நோய் குணமாக விநாயகரை வணங்கினார்.

*அவருக்குப் பிள்ளையார் அருகம்பில்லை அரைத்து மருந்தாக கொடுத்து நோயை குணமாக்கினார். அதன் பிறகே குபேரன் மக்களுக்குப் பணத்தை வாரி இறைந்தார். 

* விநாயகப்பெருமானை லட்சுமி குபேர கணபதியாக வழிபட்டால் குபேரனுடைய திருவருள் கிடைக்கும்.

*தென் நாட்டில் ஆந்தையைக் கண்டால் அலறி ஒடுகிறோம். ஆனால் வடநாட்டவர் தீபாவளி அன்று மகாலட்சுமியின் வாகனமாக அருகில் வைத்து வழிபடுகின்றனர். அன்று யார் வீட்டிலாவது ஆந்தை வந்து அமர்ந்து குரல் எழுப்பினால் லட்சுமி குபேரன் அருள் வரப்போகிறது என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆந்தை கண்ணில் பட்டால் யோகம் அடிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. 

*கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 20 தீர்த்தங்கள் மட்டுமே வெளியில் தெரிபவை. அவற்றில் ஒன்றுதான் குபேர தீர்த்தம். 
*ஒவ்வொரு வருடமும் மாசி மக தீர்த்த உற்சவத்தின்போது குபேரன் இந்த தீர்த்தத்தில் தங்கி அனைவருக்கும் அருள்வதாக ஐதீகம். இந்திர தீர்த்தத்திலிருந்து சுற்றில் 6வதாக உள்ளது.

*உங்களுக்குப் பெரிய கடன் அடைபடாமல் இருக்கிறதாப கடன் அடைப்பட்டு நிம்மதி அடைவதும் குபேர யோகம் தான்.

* மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் வாங்கிய தொகையில் சிறிதளவு அடைத்து விட்டால் ஒரு ஆண்டிற்குள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது உண்மையாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE