பிள்ளையார் எறும்பு பிறந்த கதை

By சரவணன்

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல், ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன் களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம்.

அதற் குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத் திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப்போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம்.

மறு நாள், ”ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிக ளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள்.
உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள். என்பது ஈசனுக்குப்புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”இதிலென்ன சந்தேகம். பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்த கேள்வி க்கே இடம் இருந்திருக்காது” என்றார்.

பார்வதிதேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தை திறந்து பார்த்தாள். சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன.  வீணாக சந்தேகப்பட்டு விட்டோமே என வருந்தினாள் தேவி.

”மகேஸ்வரி… உனது ஐயம் விலகியதா?” குறும்பாகக் கேட்ட பரமேஸ்வரன், ”சரி, சரி… விநாயகன் உன்னை தேடி கொண்டிருந்தான். போய்ப் பார்” என்றார். விநாயகரைச் சந்தித்த பார்வதிதேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி.

”ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற் றுக்கும் தாங்கள்தான் காரணம்!” என்றார் விநாயகர்.

”என்னச் சொல்கிறாய் நீ?” படபடப்புடன் கேட்டாள் பார்வதிதேவி

”அன்னையே… அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொ ண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்த து அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது! தாயின் பழி தனயனைத் தானே சாரும். எனவே, எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது” விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதிதேவி கண் கலங்கினாள். விநாயக ரை அழைத்து கொண்டு சிவனாரிடம் சென்ற வள், ”ஸ்வாமி, என்னை மன்னியுங்கள் நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்” என்று வேண்டினாள்.
”வருந்தாதே தேவி, பக்தர்கள் என்பால் வைக் கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும்.  ‘நம்பிக்கை’க்கு இணை யான பூஜையோ வழிபாடோ கிடையாது.

இதை, உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன், அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகை யில், அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும்!” என அருளினார்.

பிறகு பார்வதியிடம், ”எறும்பு உண்டது போக, மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாய கனுக்குக் கொடு!” என்றார். அப்படியே செய்தா ள் பார்வதி. அந்த பருக்கைகளை உண்ட விநா யகரின் வயிறு பழைய நிலைக்கு திரும்பியது; அவரது பசியும் தீர்ந்தது.

இந்த அருளாடல் சம்பவம், தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு.

"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்..
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்.."
விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
30.04.2025... நேசமுடன் விஜயராகவன்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE