ஓம் ஶ்ரீ சாய் ராம்: நான் உன்னைக் காப்பாற்றுவேன்

By செய்திப்பிரிவு

 

ஓம் ஶ்ரீ சாய் ராம் 

(ஸ்ரீ  ஷிர்டி சாயிபாபாவின் அருள்வாக்கு)

 

உன்னிடம் எல்லா வளங்களும் நிறைந்தி ருக்கும்போது, எல்லாம் நன்றாக இருக்கும் போது எல்லோரும் உன்னிடம் வருவார்கள் காலம் மாறி இதற்கு மாறாக நடக்கும் போ து உன்னவர் என்று நீ நினைத்த யாரும் உன்னிடம் வர மாட்டார்கள். உன்னுடன் இருக்கவும் மாட்டார்கள். 

 

அப்போது நீ காலத்திற்குக் கட்டுப்படவனே ஆகின்றாய். உண்மையில் இந்த பிரபஞ்ச த்தில் நம்பத் தகுந்தது எதுவும் இல்லை. யாரும் இல்லை. அப்படிப்பட்ட சங்கடமான நிலையில், நான் தனித்து உள்ளவன் என்ற பாவம் ஏற்பட்டு பயம் உன்னுள் தோன்றுகிறது. நீ உண்மையென்று நம்பியிருந்தது வெறும் மயக்கமே என்று உனக்குத் தெரியவரும். அப்போது புலம்புவதனால் லாபம் என்ன?

 

நான் சனாதனமானவன்(ஆதிபுருஷன்). என் பாதங்கள் மிகவும் புராதனமானவை. காலத்தோடு யுகங்கள் பல மாறினாலும் நான் இருப்பேன். உன் நட்பு, அநுராகம், பிரேமை, விசுவாசம் முதலியவற்றை என்மேல் வைத்திரு. 

 

நான் உன் கண் இமையைப் போன்றவன். உன் முயற்சி இல்லாமலேயே நான் உன் னைக் காப்பாற்றுவேன். புறஉலகினை நம்பியிருக்கும்வரை, துன்பம் இருந்து கொண்டுதானிருக்கும். உன் வெளிமுகப் பார்வையை உதறித்தள்ளு. உள்நோக்கிய பார்வையால் என்னைத் தரிசி. உனக்குத் துணையாக இருப்பேன்.   

 

என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை..

 

நன்றி விஜயராகவன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE