ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவில். மோரனப்பள்ளி. ஒசூர்

By செய்திப்பிரிவு

இக்கோயிலின் இராசகோபுரத்தில் பிரம்மாண்டமான பிரத்தியங்கரா தேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வார இறுதியிலும், வார நாட்களிலும் பலர் வருகின்றனர். இக்கோயிலில் பிரத்தியங்கிரா தேவி , சரபேசுவரர், நரசிம்மர், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன.

இக்கோயில் விசாலமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுள் நுழைய சிம்ம வாய் வாசல் உள்ளது. பக்தர்கள் பிரத்தியங்கிரா தேவிக்கு மாலைகள் வைத்தும், தேவியின் பாதங்களில் நெய் விளக்கு ஏற்றியும் வணங்குகிறார்கள்.

மோரனப்பள்ளி. ஒசூர்

இரண்டாவது சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE