சங்கடஹர சதுர்த்தியின் மகிமை

By செய்திப்பிரிவு

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தருவது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பி றைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உத யமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். 

 

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழை க்கப்படு கிறது. அந்த நாளில் காலையிலி ருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித் த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

 

சதுர்த்தியின் மகிமை:

 

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முரு கப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரை க்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்க mnளிலும் இவ்வி ரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதம் மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரத த்தை உபதேசித்தவர் கண்ணபிரான். 

 

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக் கு கணபதியே இவ்விரதத்தை  சொல்லி அருளினார். பார்வதி பல ஆண்டு க்காலம் இவ்விரதத்தை  மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். 

 

இந்திரன், சிவன், இராவணன் போன்றோ ர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்தி ருக்கி ன்றனர். அனுமன் சீதையை கண்டது தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விர தத்தின் மகிமையால் தான்.

 

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்

உமாஸுதம் சோக விநாச காரணம் 

நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

 

ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு வதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணப ட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. 

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE