நேபாள் பசுபதி நாதர் கோவில்

By தேஜஸ்

நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் ஊரின் நடுவில் இருக்கும் பிரமாண்ட ஆலயம் பற்றிய தகவல்கள்.

பிரமாண்டம் என்றால் நம்ம ஊர் மாதிரி உள் பிரகாரம், வெளி பிரகாரம்என்று இருக்காது. மூலவர் இருப்பார். அவர் இருக்கும் கருவறை மேல் இரண்டு அடுக்கு கோபுரம் ( மாதிரி ) இருக்கும். பகோடா பாணி கட்டிட கலை என்பார்கள். அப்புறம் சின்ன சின்னதாக 518 ஆலயங்கள் உள்ள வளாகம்.

பாகுமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோவில்.
கோவில் வளாக சுவரை ஒட்டியபடியே ஆற்றின் கரை. கரையில் மயானம். தகனமேடை. கோவில் உள்ளே இருந்து மனித உடல்கள் எரியூட்டுவதை நாம் காண முடியும்.

எப்பொழுதும் நிறைந்த கூட்டம் உள்ள ஆலயம். மாலை நேரங்களில் கருவறை உள்ளே வரை சென்று சாமி தரிசனம் செய்யலாம். மாலையில் ஆரத்தியும் உண்டு.
நிறைய இந்து புராணங்களில் இந்த ஆலயத்தின் சிறப்பு கூறப் பட்டுள்ளது.
 ஸ்கந்த புராணத்தின் படி மிகவும் புனிதமான சிவ க்ஷேத்திரங்களில் ஒன்று ( சிவனின் உறைவிடங்கள் ) என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

 தேவாரத்தின் பாடல் பெற்ற தலம்.
பக்தர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் மூலவர் என்று  சிவபுராணம் கூறுகிறது இந்தியாவில் உள்ள காசி விஸ்வநாதரில் உள்ள சிவனின் தலையாக இந்தக் கோயில் வணங்கப்படுகிறது.

 பாரம்பரியமாக, சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரிய தட்சிணாம்னாய பீடத்தால் கல்வி கற்ற கர்நாடகாவைச் சேர்ந்த வேத திராவிட பிராமண அறிஞர்கள் முக்கிய கோயில் அர்ச்சகர்கள் ஆவர் .

வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய ஆலயம்.
"ஹர ஹர மஹாதேவ் "

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE