நெல்லை நெல்லையப்பர் காந்திமதி ஆனிப்பெருந் தேர்த்திருவிழா

By

நெல்லை  நெல்லையப்பர் காந்திமதி ஆனிப்பெருந் தேர்த்திருவிழா.   இன்று ஐந்தாம் நாள் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் இந்திர விமானத்திலும் திருவீதிவுலா நடைபெற்றது.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா வந்தன. இன்று ஐந்தாம் நாள் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் இந்திர விமானத்திலும் திருவீதிவுலா நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை மற்றும் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE