10 பணக்கார கோயில்கள்?

By தேஜஸ்

*இந்தியாவில் புகழ்பெற்ற இந்து கோயில்கள் பல உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன.*
 
பெரும்பாலான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அறக்கட்டளைகள் மூலமாகவும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

 அந்தவகையில், இந்தியாவின் பொக்கிஷமாக விளக்கும் 10 புகழ்பெற்ற பணக்கார கோயில்களைப் பற்றி பார்ப்போம். 

*1. பத்மநாபசுவாமி திருக்கோயில்,*

 திருவனந்தபுரம் 
பத்மநாபசுவாமி  திருக்கோயில் இந்தியாவில் இல்லையென்றாலும், உலகில் பணக்காரக்கார கோயில்களில் முதலாவதாக விளங்குகின்றது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். இந்தக் கோயில் பகவான் விஷ்ணுவைப் பிரதானமாக கொண்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 
இக்கோயில் மூலநாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். பழமையான இக்கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் புகழுடன் விளங்கியது. அச்சமயத்தில் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்டது. 
இக்கோயிலில் பாதாள ரகசிய அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறைக்குள் விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,  அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

*2. திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோயில்,*

 ஆந்திர பிரதேசம்
இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 
இத்தலம் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. 
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 650 கோடி வருமானம் வரும் இந்தியாவின் பணக்கார கோயில்களில் இரண்டாவதாகும். இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடியாகும். 

*

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE