திருக்கடையூர் கோவிலில் இளையராஜா சதாபிஷேகம்

By

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள். இங்கு பக்தர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' செய்வது சிறப்பம்சமாகும். 

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இக்கோயிலுக்கு வந்து தனது 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். 

இதில், கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE