குரு லிங்க சங்கம் பாதையாத்திரை துவக்கம்

By

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆதீன பூஜா மூர்த்தியான ஸ்ரீ சொக்கநாத பெருமானோடு குரு லிங்க சங்கம பாதையாத்திரையை தருமபுரம் மடத்திலிருந்து தொடங்கினார்கள். 

நாதஸ்வர, தவில் வித்வான்கள் இசை மழை பொழிய, ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திருமுறை இசை வழங்க, ஆதீன திருக்கூட்டத்து அடியவர்கள் புடைசூழ, தருமபுரம் ஆதீன சிவம்பெருக்கும் வீதிகள் வழியாக, குரு லிங்க சங்கம பாதயாத்திரையானது வெகு விமரிசையாக தொடங்கியது.
அன்பர்கள் தங்கள் வீடுகளின் வாசலில் கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றி, பூரணகும்பம் வைத்து, அருச்சனை செய்தும், தீபாராதனை காட்டியும் வழிபட்டனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE