நவக்கிரகங்களில் சனி போல் கொடுப்பவ ரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது. மனித வாழ்வில மூன்று முறை ஏழரை சனி வரும். மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் தேவ தூதர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களு க்கு ஏழரை நாள் ஆகும்.
கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. விநாயகரை பிடிக்க வந்தார் சனீஸ்வரன்.
விநாயக பெருமானே என் கடமைப்படி நான் உங்களை ஏழரை நாட் கள் பிடிக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும். என் கடமையை செய் ய நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.
விநாயகர் மறுக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என்தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடி க்கவிருப்பதை சொல்லி விட்டு வருகிறே ன். நீங்கள் நாளை என்னை வந்து பிடித்துக் கொள்ளலாம்.
என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டு செல்லுங்கள் என்று கூறினார். சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார்.
மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். என் முதுகில் என்ன எழுதியிருக்கி றீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளை வருகிறேன் என்று முதல் நாள் தான் எழுதியதையே படித்தார்.
சனீஸ்வரரே நீங்கள் சொன்னை சொல்லை காப்பாற்றுவீர்கள் சொன்னபடியே நடந்து கொள்வீர்கள். நீங்கள் தான் இப்போது இன்று போய் நாளை வருகிறேன் என்றுகூறினீர்கள். இன்று போய் நாளை வாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தார்.
சனீஸ்வரர் மறுநாள் வந்தார். முதல் நாள் கதையே அன்றும் தொடர்ந்தது.
ஏழாவது நாள் சனீஸ்வரன் இன்று போய் நாளை வருகிறேன் என்று படித்ததும், விநாயகர் நீங்கள் எழுதியதை நீங்களே அழித்துவிட்டு நாளை வாருங்கள் என்றார்.
சனீஸ்வரனுக்கு ஒரே சந்தோஷம். நாளை விநாயகரை பிடித்துவிடலாம் என்று மகிழ்ந்தார்.
அவர் மனதில் நினைத்ததை புரிந்து கொண்ட விநாயகர். சனீஸ்வரரே நீங்கள் கூறிய ஏழரை நாட்கள் இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நீங்கள் என்னை பிடிக்க முடியாது என்று கூறினார். சனி பகவான் தோல்வியுடன் திரும்பினார்.
சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விநாய கரை வணங்கினால் போதும் அவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.