விநாயகருக்கு அவல் படைப்பதன் ஏன்?

By நந்தா

அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு  மிகக்கடுமையாய் இடிபடும்.  எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது.

அரிசி உரலுக்குள்  இடிபடுவது போல, மனித னாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என  வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான்  ஆகவேண்டும். அதற்காக இறைவன் மீது வருத்தப் படக்கூடாது.

இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. வகுப்பறையிலுள்ள  உங்கள் பெஞ்சில் செல்லும் எறும்பை நீங்கள் நசுக்கக் கூடாது.

கடிக்கவந்தாலும் தூர தள்ளிவிட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்தபிறவியில் இதே துன்ப த்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று  குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.

விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம்:

மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காக தான். நெல்லை நிலத்தில் போட்டால்  முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது.

நீ நெல் போல இருக்காதே; பொரியாக மாறி விடு. பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையா தோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லை யே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகி விடு, என்பதே  இதன் பொருள்.

விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம்:

மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை  அடைந்து தான் ஆக வேண்டும்.  

அதற்குரிய முன்னேற்பாட் டை நீ செய்து கொள். பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும்  உழைப்பதிலோ எந்த தவறும் கிடை யாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ என்ன செய்திருக்கிறாய் என்று எண்ணிப்பார்.

உனது மனைவி குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். இது உன் குடும்பத்திற்கு மட்டுமே ஆகும். ஆனால்,  இந்த உலகத்திற்கா க நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான்.

குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய் தாயா என யோசித்து பார். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெ னில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி  போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும்.

அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய்  பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.

சிதறுகாய் உடைப்பதன் காரணம்:

எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  

ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற் கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந் தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான்.

அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கை யில் வைத்திருந்த தேங்காய்களை அசுரனை நோக்கி எறிந்தார்.  .தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான்.

இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப் படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE