குன்றத்தூர் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் - ஏப்.25ல் கோலாகலம்

By

சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தத் திருக்கோயில் மற்றும் அதனை அடுத்து அந்த ஊரின் வட திருநாகேஸ்வரம் கோயில் என இரு கோயில்களுக்கும்  வரும் 25ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

கும்பாபிஷேக விழா வரும் 20ம்தேதி தொடங்குகிறது. அன்று விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடக்கிறது. 21ம் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது. 22ம் தேதி மகாலட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பரிவார பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது தொடர்ந்து, 23ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, 3ம் கால யாகசாலை பூஜை ஹோமம் ஆகியவை நடக்கிறது. 

24ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை, விசே‌ஷ தீபாராதனை, 5ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. 25ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 

அதனை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் , வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE