அருள்மிகு ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் திருக்கோவில்.

By சரவணன்

திருநாரையூர் உள்ள திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீசௌந்தரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு ‘பொண்ணாப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இத்தலம் விநாயகரின் ஆறாம்படைவீடு..

இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் ‘பொல்லாப் பிள்ளையார்’ என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். ‘பொல்லா’ என்னும் பதம் ‘உளியால் செதுக்கப் படாத’ தன்மையைக் குறிக்கும்.

சுயம்பு மூர்த்தி இப்பெருமான்.  

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இது விநாயகரின் ஆறாவது படை வீடாகும். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் காணப்படும் பிள்ளையார் இங்கே ஒட்டிய வயிற்றுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றுதான். பக்தர்களின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் மிகவும் ஓடியாடி உழைத்ததால் தொப்பை கரைந்து வயிறு ஒட்டி காட்சியளிக்கிறார்..

திருநாரையூர். காட்டுமன்னார் கோவில். கடலூர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE