ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம் ஏன்?

By நந்தா

தீராதப்பிணிகளைத் தீர்த்து வைக்கும் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்.

குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்க்கையை வரமாகப் பெற, 'ஸ்ரீ'தன்வந்த்ரி பகவானை வழிபட வேண்டும். அவரை வழிபடுவதால் தீராத பிணிகளும் தீரும்; எவ்வித நோய் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்கின்றன ஞானநூல்கள்

உடல் நலம் வேண்டி செய்யப்படும் தேவ யக்ஞமே ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம். மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழத் திருவுள்ளம் கொண்ட பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தான் தன்வந்த்ரி அவதாரம்!

அவர் திருக்கரத்திலிருந்து பெற்ற அமிர்தத்தை உண்டதால்தான் தேவர்கள் அழியாத அமரத்துவத்தைப் பெற்றனர் என்கின்றன ஞானநூல்கள்.

ஆயுர்வேதத்தின் சிருஷ்டிகர்த்தா ஸ்ரீதன்வந்த்ரி பகவான். நாள்பட்ட தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தீர்வு வேண்டி, ஸ்ரீதன்வந்த்ரி பகவானை மனதார வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் நிவாரணம் பெறலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE