அண்ணாமலையார் திருக்கோயிலில் ஊஞ்சல் மற்றும் நலங்கு உற்சவம்

By

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் மற்றும் நலங்கு உற்சவம் நடைபெற்றது.

கடந்த பங்குனி உத்திரத்தன்று அண்ணாமலையாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்பு ஆறு நாட்கள் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஐந்தாம் நாளான நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று சுவாமியும் அம்பாளும் மறு உண்ணல் நிகழ்ச்சிக்காக குமாரகோவில் சென்று மறு உண்ணல் நிகழ்ச்சி முடிந்த பிறகு தாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பின்பு காமாட்சி அம்மன் கோவில் வழியாக மாடவீதி வலம் வந்து திருக்கோயிலுக்கு வருவர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE