வாண்டராயன் கட்டளை சிவன் கோயில்

By நந்தா

Vandarayankattalai sivan temple
திருமானூரின் கிழக்கில் செல்லும் காமரசவல்லி சாலையில் 12 கிமி தூரம் சென்றால் வாண்டராயன் கட்டளை கிராமம் அடையலாம். காமரசவல்லி ஏரிக்கும் மேலவரப்பன்குறிச்சி ஏரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவ்வூர் விளங்குவதால் செழிப்பான வயல்கள் கதிர் நிறைந்து காணப்படுகின்றன.

வாணாதிராயர்கள் (அல்லது வானகோவராயர்கள்) என்பவர்கள் தமிழக வரலாற்றில் பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் குறுநில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், சிறந்த அரசியல் அதிகாரிகளாகவும் விளங்கிய குறுநில ஆட்சியாளர்கள் ஆவர்.
வாணதிராயர் கட்டளை, வாணதிராயன் பட்டினம் வாணதிரையன் பற்று என ஊர்கள் இவர்களது பெயரில் உள்ளன. இவ்வூரும் அவ்வாறே இருந்து மருவி வாண்டராயன்கட்டளை என உருவானதாகலாம்.

இவ்வூரில் நூறாண்டுகளின் முன்னர் பெரிய சிவாலயம் ஏரியின் கரையில் இருந்ததாகவும் காலப்போக்கில் சிதிலமாகிவிட்டதால் அதில் இருந்த லிங்கம் மரத்தின் அடியில் வைக்கப்பட்டு இருத்தது சில நல்லோர் உதவியினால் இறைவனுக்கு ஒரு தகர கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு இறைவன் ஆதிலிங்கேஸ்வரரர் எனும் பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பெரிய லிங்கமாக இருப்பவர்தான் மூலவராக இருந்திருக்க கூடும், சிறிய லிங்கமும் நந்தியும் பிரகார லிங்கமாக இருந்திருக்க வேண்டும். தக்ஷணமூர்த்தியின் அழகை பாருங்கள்; இவ்வளவு பெரிய மூர்த்தி வைக்கும் கோஷ்ட மாடம் அதன் கருவறை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்!!.

இந்து மதத்தின் பெருமைகளையும் அதில் சிவனாரின் பெருமைகளையும் பற்றி அனைத்து சமூகத்தினரிடமும் பரப்பாமல் சிறு வட்டத்துக்குள் வைத்து பூஜித்து வந்ததால் அந்த அருமை பெருமைகளை அறியாமல் போய்விட்டனர்.

தாம் உடைத்தது மண் குடமல்ல, பொன் குடம் என்பதை அனைத்து சமுதாயத்தினரையும் உணர வைக்காத வரை சிவாலய சிதைவுகள் ஏற்படத்தான் செய்யும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE