V.கைகாட்டி எனும் விளாங்குடி கைகாட்டியில் இருந்து தென்கிழக்கில் செல்லும் சாலையில் 17 கிமி தூரம் சென்றால் விக்கிரமங்கலம் அதன் தெற்கில் 7 கிமி தூரம் சென்றால் ஒரு பெரிய ஏரியின் கரையில் கோமான் கிராமம் உள்ளது.
ஊரின் வடபுறத்தில் மருதையாறு ஓடுகிறது. தெற்கில் சில கிமி தூரத்தில் கொள்ளிடம் ஓடுகிறது அதனால் ஊர் எப்போதும் ஒரு பசுமையான சூழலில் உள்ளது.
ஊர் மையத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில் தெருவின் கடைசியில் சிவாலயம் இருந்துள்ளது.
ஆனால் ஒரு காலகட்டத்தில் முழுமையாக சிதைவடைந்து போய்விட்டது. அதில் இருந்த லிங்க மூர்த்தியையும் நந்தியையும் எடுத்து ஒரு தகர கொட்டகை ஒன்றை அமைத்து அதில் வைத்து பூஜிக்கின்றனர்.
கிழக்கு நோக்கியபடி உள்ளார். கோயில் எப்படி இருந்தது, பெயர் என்னவாக இருந்தது என அறியமுடியவில்லை. மீண்டும் நல்லதொரு கோயிலில் இறைவனை வைத்துப்பார்க்க கிராமமக்கள் விரும்புகின்றனர்.