சித்திரகுப்தர் காயத்ரி மந்திரம் பாவங்களை போக்கி, ஆயுளை நீடித்து, புத்தியை தெளிவாக்க உதவும் சக்தி வாய்ந்தது.
இந்த மந்திரத்தை சித்ரா பௌர்ணமி அன்று காலை மாலை மற்றும் சனிக்கிழமைகளில், கையில் எழுத்தாணி ஏந்திய சித்ரகுப்தரை தியானித்து உச்சரிப்பது சிறப்பாகும்.
ஸ்ரீ_சித்ரகுப்த_காயத்ரி மந்திரம்:
ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே
பத்ரத ராய தீமஹி
தந்நோ சித்ரஹ் ப்ரசோதயாத்
மந்திரத்தின் பொருள்:
லேகிநி ஹஸ்தாய: கையில் எழுத்தாணி (எழுதுகோல்) வைத்திருப்பவரை,
பத்ரதராய: நல்லவற்றை (தர்மங்களை) காப்பவரை,வித்மஹே: உணர்கிறோம்.
அறிகிறோம், தீமஹி: தியானிக்கிறோம்,
தந்நோ சித்ரஹ் ப்ரசோதயாத்: அந்த சித்ரகுப்தர் நமது புத்தியை தெளிவாக்கி நல்வழிப்படுத்துவாராக.
வழிபாட்டு முறை:
சித்ரகுப்தருக்கு சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.அவரை வணங்குவதன் மூலம் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் மற்றும் ஆயுள் நீடிக்கும்.