பிள்ளையார் ஏன் பாம்பை இடுப்பில் கட்டி இருக்கிறார்?

By நந்தா

ஒரு விநாயக சதுர்த்தி முடிந்து பக்தர்கள் கொடுத்த விதவிதமாக கொழுக்கட்டைகளையும் மோதகங்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டு விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது ஏறி திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வயிறு நிறைய சாப்பிட்டதால் அவருக்கு சமநிலை தவறியது வழியில் ஒரு பாம்பு குறுக்கே வர அதை கண்டு பயந்த மூஞ்சூறு சட்டென நகர விநாயகர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த வேகத்தில் அவர் சாப்பிட்ட கொழுக்கட்டைகள் எல்லாம் வயிறு வெடித்து வெளியே வந்துவிட்டன.

சுற்றிலும் பார்த்த விநாயகர் கீழே கிடந்த அந்த கொழுக்கட்டைகளை மீண்டும் வயிற்றுக்குள் திணித்தார் வயிறு மீண்டும் வெடிக்காமல் இருக்க அங்கே கிடந்த அந்த பாம்பையே ஒரு கயிறு போல தன் வயிற்றை சுற்றி இருக்கி கட்டி கொண்டார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த சந்திர பகவான் வானத்திலிருந்து விழுந்து விழுந்து சிரித்தார்.. விநாயகரின் உருவத்தை கண்டு பரிகாசம் செய்த சந்திரனின் கர்வத்தை அடக்க இனி உன் அழகு யாருக்கும் தெரியாது உன்னை பார்ப்பவர்கள் பாவியாவார்கள் என்று சாபமிட்டார். பிறகு சந்திரன் மன்னிப்பு கேட்டதால் வளர்பிறை தேய்பிறை என சமரசமானது

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE