பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?

By நந்தா

மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான்.

ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான்.

கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது.
அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது.

அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

ஆம் பெருமாளின் பாத தரிசனம் வாழ்வில் ஏற்றத்தையும், வெற்றியையும்,சுபீட்சத்தையும், அனைத்தையும் தரவல்லது.

ஓம் நமோ நாராயணாய....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE