பூமிநாதர் திருக்கோயில் செவலூர், புதுக்கோட்டை

By நந்தா

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்து தர வேண்டும் என்பது அவளது வேண்டுகோள்.

அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.

உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடியலைந்த பூமாதேவி, அவள் பல தலங்களுக்கும் சென்றாள்.
சென்ற இடமெல்லாம் ஆங்காங்கு இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.

இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.

பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும்.
தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.

செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.

மகா விஷ்ணுவால் எழுப்பப்பட்ட புண்ணியத் தலம், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது வருடத்தின் எல்லா நாட்களும் சூரியஒளி படுவது போல் கருவறை அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்!
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்களில் சென்றால் குளிபிறை என்ற ஊர் வரும். இங்கிருந்து 3 கி.மீ., தூரத்திற்கு ஆட்டோவில் சென்றால் செவலூரை அடையலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE