வேதவியாசர் மகாபாரதத்தை இயற்றும் பொழுது அதற்கு எழுத்தாளராக விநாயகர் இருந்தார் வியாசர் சொல்லும் வேகத்தில் கணேசர் எழுத வேண்டும் என்று ஒரு நிபந்தனை இருந்தது இதனால் அனைத்து எழுத்துக்களையும் துல்லியமாக எழுதினார்.
கணேசன் இதே நேரத்தில் அருகில் சரஸ்வதி நதி பாய்ந்து கொண்டிருந்தது அதிலிருந்து மிகவும் சலசலப்பு சத்தம் கேட்டது இதனால் கணேசருக்கும் வியாசருக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிய தொந்தரவாக இருந்தது.
பிறகு கணேசர் மிகவும் பணிவுடன் சரஸ்வதி நதியிடம் சென்று நாங்கள் ஒரு அற்புதமான காவியத்தை இயற்றிக் கொண்டிருக்கிறோம் உங்களின் சத்தம் எங்களுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறது ஆகையால் உங்கள் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றார்.
ஆனால் சரஸ்வதி நதி தன்னுடைய இயல்பு வேகத்திலேயே சென்றது மேலும் விநாயகர் கூறியதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை விநாயகர் தொடர்ந்து தடைகள் வருவதை பார்த்து கோபமடைந்து சரஸ்வதி நதியை பார்த்து உன் சத்தம் குறைந்து பூமியில் யார் கண்ணுக்கும் தெரியாமல் பாதாள உலகத்தில் தான் தென்படுவாய் என்று சாபம் கொடுத்தார் இதனால்தான் சரஸ்வதி நதியை மனிதர்கள் காண முடியவில்லை...