“ ரத்தின வேல் ரகசியனே..!”
உன்னிடம் அத்தனை கேட்கப் பயம்
எண்ணிய தக்கணம் கேட்கச் செயம்
சின்மய சங்கரர் கேட்கப் பயன்
விண்ணவர் கெஞ்சிய வேல்வித் தையன்..
ரம்மிய வள்ளிதன் காதல் திடம்
பம்மிய துங்கதை வேள்சங் கடம்
நண்பகல் பித்தெனப் பேர்வந் திடும்
இன்பந்த ரும்இதை ஊர்பங் கிடும்..
ரத்தின செவ்வயில் தோள்மின் னிடும்
சந்திர முவ்விரண் டால்அல் கெடும்
தந்திர முள்மனம் வேல்வெட் டவும்
இந்திர னின்சுகம் வேர்விட் டெழும்..
சுப்பிர மண்யநற் றாள்தொட் டெழும்
அப்பிர மன்பயின் றான்தன் தொழில்
விக்கிர மன்சமர் வேள்கண் டதும்
அக்கிர மன்உயிர் வாய்விட் டழும்..
நித்திய மங்களம் நாள்தங் கிடும்
புத்தியி லம்புயன் பேர்வந் திடும்
இந்திர நன்னகர் மேல்செல் லவும்
சித்திர சண்முகர் கால்பற் றவும்..5
இப்புவி யில்துயர் நோய்கண் டவர்
துப்பில வெப்பயர் வால்நொந் தவர்
தப்பிட அப்பனின் பால்செல் லுவர்
செப்புவ தன்பொழுக் கால்நிற் பவர்..
எழிலன் சர்மா அல்லூர்