பச்சைபட்டினி விரதமுறைகள்!

By செய்திப்பிரிவு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழியும் உண்மையும் கூட, ஆனால் உப்பில்லாத பண்டம் உண்பதிலே தாய்
கண்ணபுரத்தாளின் கருனையை, தியாகத்தை உணர முடியுமே
என்பது என் அனுபவ உண்மை.

மஞ்சள் உடை உடுத்தி மஞ்சள் மாலையில் கண்ணபுரத்தாள் திருஉருவம் பதிந்த டாலர் அணிந்து வரும் 28 நாட்களோ அல்லது அவரவர் (ஒருநாள் இருந்தால் கூட போதும்) எத்தனை நாட்கள் கடுமையான பச்சைப் பட்டினி விரதத்தை இருக்க முடியுமோ
கண்ணபுரத்தாளை மனதில் நிலை நிறுத்தி தொடங்கலாம்.

கண்ணபுர மக்களின் விரத முறை என் தந்தை பின்பற்றும் விரத முறையும் கூட
காலையில் இளநீர் மட்டுமே அருந்துவார்கள்,

மதியம் வாழை இலையில் உப்பில்லா வெறும் சாதத்துடன் தயிர் அல்லது சர்க்கரை கலந்து அதனுடன் மாங்காய் துண்டோ, வெள்ளரி துண்டோ அல்லது சிறிது தேங்காய் துருவதுடன் உண்பார்கள்.

இடையில் பழச்சாறு அல்லது காபி அருந்தி கொள்வார்கள்.
மாலை கண்ணபுரத்தாளுக்கு படைத்த துளு மாவு உண்ணும் போது அன்றைய தின களைப்புயெல்லாம் காணமால் ஆக்குவாள் கண்ணபுரத்தாள்.

கண்ணபுரத்தாளின் துளு மாவு கிடைத்தாலே
மனதில் வலு கிடைக்கும்.
இரவில் பால், சர்க்கரை கலந்த அவலுடன் வாழை பழத்துடன் கண்ணபுரத்தாளை நினைவுடன் உறங்க போவார்கள்.

இவ்வாறு முடியாதவர்கள் எப்போதும் போல
காலை உப்பில்லாத இட்லி, தோசையுடனும், இடையில் பழரசங்கள், பழங்கள், வெள்ளரி சாப்பிடுவர்கள் மதியம் உப்பில்லாத சாதம், சாம்பார், ரசம், தயிருடன், மாங்காய், வெள்ளரி பிஞ்சு,தேங்காய் துருவலுடன், இரவு பால் பழம், அவல் அல்லது உப்பில்லா தோசை இட்லியுடன் கூட அருந்துவார்கள்.

எனக்கு தெரிந்து இது கொஞ்சம் கடினமே, கண்ணபுரத்தாளை நினைத்து பார்த்தாலே இது எளிதே.
கடுமையான இவ்விரத முறை இருக்க முடியாதவர்கள் எப்போதும் போல் சைவ உணவு மட்டும் அருந்தி கண்ணபுரத்தாளை நினைத்து இருந்தால் கூட போதும். அவள் இருப்பதே நமக்காகதான்,

பக்தர்களின் விருப்பமே கண்ணபுரத்தாள் விருப்பம். கடுமையானபச்சை பட்டினி விரதமோ அல்லது உங்களால் எது முடியுமோ அவ்விரத முறையை பக்தர்கள் அவர்களது ஆத்ம திருப்தியுடன் இருந்தால் தாய் கண்ணபுரத்தாளின் ஆசி கிடைக்கும்.பச்சை பட்டினி விரதத்தால் ஓரு சொட்டு ரத்தம் நம் உடலில் சுண்டினாலே சுபமாகும் நம் வாழ்வு, ஓர் தெளிவும் பிறக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE