ஒரு காலத்தில், விசுவாமித்திர மகரிஷி, தமது யாகங்களை அசுரர்களிடமிருந்து காக்க ஸ்ரீ ராமர் – லக்ஷ்மணர்களை தம்முடன் அழைத்து வந்தார். அரண்மனையின் சுகபோக வாழ்வில் வளர்ந்த ராஜகுமாரர்கள், காடுகள், மலைகள், நீண்ட பயணங்களால் களைத்துப் போய் கங்கைக் கரையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அதிகாலைப் பொழுதில்,
கங்கை ஸ்நானம் செய்து
ஜப–தபங்களை நிறைவு செய்த விசுவாமித்திரர்,
ராம–லக்ஷ்மணர்களை எழுப்ப முயன்றார்.
நாலரை மணி முதல் ஆறரை மணி வரை…
எவ்வளவு முயன்றும் இருவரும் எழவில்லை.
அப்போது அவர் உச்சரித்த அந்த அமுதவாக்கியமே—
“கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”
இந்த ஸ்லோகத்தின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
“கோசலையின் தவப்புதல்வனே, ராமா!
கிழக்கில் விடியல் உதயமாகிவிட்டது.
மனிதர்களில் சிங்கமே!
எழுந்து உன் தெய்வீக கடமைகளை நிறைவேற்று.”
இது வெறும் எழுப்பும் சொல் அல்ல…
ராமனின் மகிமையைச் சொல்லும் முன்,
அவனைப் பெற்ற தாயான கௌசல்யையின் பெருமையைப் புகழும் வாக்கியம்!
“இத்தகைய மகாவிஷ்ணுவின் அவதாரத்தைப் பெற
கௌசல்யை எத்தனை தவம் செய்திருப்பாள்?”
என்று விசுவாமித்திரர் மறைமுகமாகப் போற்றுகிறார்.
லக்ஷ்மணனை ஏன் எழுப்பவில்லை?
பலருக்கும் வரும் கேள்வி இதுதான்.
லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அம்சம்.
மகாவிஷ்ணுவின் படுக்கை.
படுக்கையை யாரும் எழுப்புவதில்லை…
அதனால்தான் இந்த ஸ்லோகத்தில் லக்ஷ்மணன் இடம்பெறவில்லை.
திருப்பதியில் ஒலிக்கும் தெய்வீக எழுச்சி
இந்தப் பாசுர வடிவை அமைத்தவர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்.
இன்றும் திருப்பதியில்,
எம்.எஸ். சுபுலக்ஷ்மியின் இனிய குரலில்
திருப்பள்ளியெழுச்சியாக ஒலிக்கிறது.
ஒரு தாயின் தவம்,
ஒரு மகரிஷியின் பக்தி,
ஒரு அவதாரத்தின் மகிமை
— அனைத்தையும் ஒரே வரியில் சொல்லும்
அற்புதமான ஸ்லோகம் இது.