பல்லவர்களின் ஆதிக்கத்தால் தங்கள் சோழப் பேரரசை இழந்த காலத்தில், சோழர்கள் தங்கள் குலம் மீண்டும் விருத்தி அடைய, நிசும்பசூதனி எனும் துர்க்கை வழிபாட்டை மிக முக்கியமாகக் கடைப்பிடித்து வந்தனர்.
இவள் சும்ப மற்றும் நிசும்ப ஆகிய அசுரர்களை சம்ஹாரம் செய்து, வீரத்தின் விளை நிலமானவள். இவள் இராகு அம்சம் பொருந்தியவள். ஆகவே இவளை இராகு காலத்தில் வணங்க, பிரமாண்ட வெற்றியும், புகழும் பெறலாம் ,
பரணி நட்சத்திர தெய்வமே துர்கை எனும் நிசும்பசூதனி. போருக்கு செல்லும் முன்பும், போரில் வெற்றி பெற்று வாகை சூடி திரும்பும் போதும், சோழர்கள் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனியை வணங்கும் மரபை கொண்டிருந்தனர்.
சோழ மன்னர்கள் நட்சத்திர ரகசியம்
ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரம் – சதயம். சதயத்தின் சாதக தாரை – பரணி நட்சத்திரம்
அதேபோல் ராஜேந்திர சோழனின் ஜென்ம நட்சத்திரம் – திருவாதிரை
இவரது சாதக தாரை – பரணி
இதுவே, இந்த இரு மன்னர்களும்
சோழர் வம்சத்தின் மிக முக்கிய அரசர்களாக விளங்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நிசும்பசூதனியை யாரெல்லாம் வணங்கலாம்.
பரணியை சம்பத்து தாரையாக கொண்ட நட்சத்திரங்கள் : அஸ்வினி, மகம், மூலம்
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
நிசும்பசூதனி தேவியை வருடம் 3 முறை வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
பரணியை ஜென்ம தாரையாக கொண்ட நட்சத்திரங்கள் : பரணி, பூரம், பூராடம்
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வருடம் 3 முறை வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வழிபாடு மேற்கொண்டால், கடன், நோய் அல்லது வழக்கு போன்ற சிக்கல்களில் சிக்காமல், நல்வழி பெற முடியும்.
பரணியை பரம மித்ர தாரையாக கொண்ட நட்சத்திரங்கள் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வருடம் 3 முறை வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வழிபாடு மேற்கொண்டால், கடன், நோய் அல்லது வழக்கு போன்ற சிக்கல்களில் சிக்காமல், நல்வழி பெற முடியும்.
பரணியை சேம தாரையாக கொண்ட நட்சத்திரங்கள் : உத்திரட்டாதி, பூசம், அனுஷம்
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வருடம் 3 முறை நிசும்பசூதனி வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வழிபாடு செய்தால், காரிய சித்தி பெறலாம்.
பரணியை சாதக தாரையாக கொண்ட நட்சத்திரங்கள் ; திருவாதிரை, சதயம், சுவாதி
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வருடம் 3 முறை வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வழிபாடு மேற்கொண்டால்
புகழ், வளர்ச்சி, கீர்த்தி
அனைத்தும் பெறலாம்.
நிசும்பசூதனி கோயில், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது.