திருப்பதியில் முதலில் வணங்க வேண்டிய கடவுள் யார்?

By சரவணன்

திருமலையின் ஆதித் தெய்வம் – ஆதி வராகப் பெருமாள்
திருமாலின் மூன்றாவது அவதாரமாகப் போற்றப்படுவது வராக அவதாரம்.
பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் மறைத்த
இரண்யாட்சன் என்னும் அசுரனை அழித்து,
ஆயிரம் ஆண்டுகள் நீண்ட போருக்குப் பிறகு
பூமி தாயைக் காத்த வரலாறே வராக அவதாரம்.

திருமலை – முதலில் வராக தலமே
இந்தியாவின் பல பகுதிகளில் வராகப் பெருமானுக்கு ஆலயங்கள் இருந்தாலும்,
திருமலை திருப்பதியில் உள்ள ஆதி வராகப் பெருமாள் ஆலயம் மிகவும் விசேஷமானது.
புராணங்களின்படி,
திருமலை ஆதியில் “வராக தலம்” என்றே அழைக்கப்பட்டது.

அங்கே உள்ள தீர்த்தம்
“சுவாமி புஷ்கரணி” என அழைக்கப்படுகிறது.
அந்தப் புஷ்கரணியின் கரையில் அமைந்ததே
ஆதி வராக சுவாமி திருக்கோயில்.

இன்றளவும் திருமலையில்
முதல் பூஜை வராகப் பெருமானுக்கே
அதன் பின்னரே ஸ்ரீநிவாச பெருமாளுக்கு
என்பதே ஆகம நியதி.
வராகப் பெருமானை போற்றும் ஸ்லோகம்
ஸ்ரீ வேங்கட வராஹாய
சுவாமி புஷ்கரணி தடே
சர்வணர்ஷே துலா மாஸே
ப்ராதுர்பூதாத்மனே நம:
பொருள்:
திருவேங்கட மலையில், சுவாமி புஷ்கரணிக் கரையில்,
ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய
ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு வணக்கம்.

பாத்ம புராணக் குறிப்பு
பாத்ம புராணத்தில்,
திருமலை வராக தலமாக இருந்தது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில்,
ஒரு அரசன் தினமும்
ஒரு புற்றின் வாயிலில் பசும்பால் ஊற்றித் தொழுது வந்தபோது,
அந்தப் புற்றினுள் இருந்து
ஆதி வராகப் பெருமாள் திருக்காட்சி அளித்தார்
என்பது ஆன்மீக வரலாறு.

ஏன் ஸ்ரீநிவாசருக்கு பிரதான பூஜை?
ஒரே திருத்தலத்தில்
இரு பெருமாள்களுக்கு ஒரே நேரத்தில்
முழு ஆகம பூஜைகள் நடைபெறுவது ஏற்புடையதல்ல.
அதனால்,
ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு
பலிபீட பூஜை
ஹோமம்
பிரம்மோற்சவம்
முதலான முறைகளை வகுத்து அளித்தார்.

ஆனால்,
“ஸ்ரீநிவாசருக்கு பூஜை தொடங்கும் முன்
வராகப் பெருமாளுக்கு பூஜை செய்யப்பட வேண்டும்”
என்பதை நியதியாக அமைத்தார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE