1. அப்யந்த் - பயமற்றவன்
2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 16 வயதான அக்ஷனை கொலை செய்தவன்
3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம்
4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன்
5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன்
6. அதுலித் - ஒப்பில்லாதவன்
7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன்
8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன்
9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன்
10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர்
11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர்
12.தீரா - தைரியம் மிக்கவன்
13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன்
14. குணசாகர் - ஒழுக்கத்தின் கடல்
15. ஞானசாகர் - அறிவு கடல்
16. ஹனுமந்த் - ஹனுமானின் ஒரு பெயர், வடிவமற்ற தாடையை உடையவன்
17. காலனாப் - நேரத்தை நிர்வகிப்பவன், நேரத்தை கட்டுப்படுத்துபவன்
18. காஞ்சனாப் - தங்க நிற உடலை உடையவன்
19. காமரூபின் - நினைத்தவுடன் வடிவத்தை மாற்றிக் கொள்பவன்
ஹனுமான் நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய பெரிய உடலை மிகவும் சிறியதாக மாற்றும் திறன் உள்ளவர்
20. லோக்பூஜ்யா - பிரபஞ்சத்தால் வழிபடக் கூடியவன்
21. மஹத்யுத்தா - கதிர்வீச்சின் தோற்றம் உடையவன்
22. மஹா தபசி - மிகப்பெரிய முனிவர் மற்றும் தியானம் செய்பவர்
23. மஹா தேஜஸ் - மிகவும் பிரகாசமானவர்
24. மனோஜ்வயா - காற்று போன்ற சக்திவாய்ந்த, விரைவான மற்றும் வலுவான
25. மாருதி - வாயு பகவான் மாருதின் மகன்,
26. பல்குன் சகா - அர்ஜுனனின் நண்பன். ஹனுமான் மகாபாரத இதிகாசத்திலும் இடம்பெறுகிறார். அதில் அவர் பாண்டவர்களை சந்தித்து, அர்ஜுனனின் நண்பராகிறார்
27. பிங்காக்ஷா - மஞ்சள்- பழுப்பு கண்களைக் கொண்டவன்
28. பிரபாவே - பிரபலமான இறைவன், சிறந்த, புத்திசாலித்தனமான, கம்பீரமானவர்
29. ப்ரஞயா - அறிஞர் அல்லது ஞானம் மிக்கவர்
30. பிரசன்னத்மனே - எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்
31. பிரதாப்வதே - போரில் சிறந்தவன், வீரம் மிக்கவன்
32. ராமதூத்யா - ஸ்ரீ ராமரின் தூதுவன்
33. ராமேஷ்தா - ராம பக்தன்
34. ரத்னகுண்டல்யா - இரத்தின கற்கள் பதித்த காதணிகளை அணிந்தவன்
35. ருத்ரான்ஷா - சிவனின் பகுதி
36. ருத்ரையா - சிவனின் பிறப்பு
37. சமீர்தனுஜ் - வாயு பகவானின் புதல்வன்
38. சர்வமந்த்ரா - அனைத்து பாடல்களையும் மந்திரங்களையும் உடையவர்
39. ஷாந்தயா - அமைதியானவன்
40. சூரன் அல்லது சூர்யா - பயமற்றவன் , தைரியசாலி , பலம் நிறைந்தவன்
41. ஸ்படிகபா - தெள்ளத் தெளிவாக
42. சுசையா - தூய்மையான, ஒழுக்கமான, சுத்தமான, அப்பாவி
43. சுரார்ச்சிதா - சொர்க்கத்தில் உள்ளவர்களால் வணங்கப்படுபவர்
44. தேஜஸ் - மிகவும் பிரகாசமானவன்
45. வாக்தீக்ஷா - வாக்கு வன்மை உடையவன்
46. வாகமைன் - சிறந்த பேச்சாளர்
47. வஜ்ரகாயே - கடினமான உலோகம் போன்ற உறுதியான உடலை உடையவன்
48. வாயுநந்தன் - வாயு பகவானின் மகன்
49. விஜிதேந்திரியா - அனைத்து உணர்வுகளையும், அதாவது காம் அல்லது பாலுணர்வு, கோபம், மாயை ஆகிய எல்லாவற்றிலும் முதன்மைப் பெற்றவர்
50. யோகின் - யோகி அல்லது முனிவர்
பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில் காட்சித்தரும் திருத்தலம் சென்னை செங்கல்பட்டு சாலையில் தைலாவரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் திருத்தலம்.
கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித்தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.
அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.
அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும்.
வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் .
துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.
ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு
ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் "பக்த அனுமான்'. கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், "அபயஹஸ்த அனுமான்'. ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் "வீர அனுமான்'. ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் "பஞ்சமுக ஆஞ்சநேயர்'. பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் "தசபுஜ ஆஞ்சநேயர்'.
நாள் அக்பர், வேட்டை ஆடும் பொருட்டு அடர்ந்த வனம் ஒன்றிற்குச் செல்ல எண்ணம் கொண்டார். தன்னுடைய மந்திரியான பீர்பாலையும் தன்னோடு கானகத்திற்கு வரும்படி பணித்தார்.
இருவரும் ஒன்றாகக் கிளம்பி வனத்திற்குச் சென்றார்கள். வெகு நேரம் சுற்றித் திரிந்தும் வேட்டை ஆடும்படி ஒரு விலங்கும் அரசர் கண்களுக்குப் புலப்படவில்லை. பொழுதுதான் வீணானதே தவிர வந்த காரியம் கைகூடவில்லை.
அரசருக்கு ஏமாற்றம் மிகுந்தது. சுற்றி அலைந்ததில், காட்டிலிருந்து ஊர் திரும்பும் வழி தவறிப் போனது. இருவரும் வழி தேடும் படலத்தினை ஆரம்பித்தார்கள். கொடுமையான வனம். இதில் திக்கு திசை தெரியாமல் இருவரும் திண்டாடிப் போனார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமையான பசி இருவரையும் வாட்டி வதைத்தது.
பீர்பால் அழகான அந்த வனத்தின் சூழலிலும், ரம்மியத்திலும் மனதைப் பறி கொடுத்தார். அழகை ரசித்துக் கொண்டிருந்ததில் பசி கூட சிறிது குறைந்தாற்போல் தோன்றியது.
ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் அமர்ந்து கொண்டார். இரு கண்களையும் மூடிய வண்ணம் 'ராம் ராம்' என்று ஜபிக்கத் தொடங்கினார்.
சக்கரவர்த்தி அக்பருக்கோ அதீத பசி வந்து விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாத பீர்பாலைப் பார்த்தார். தன்னைத் தவிக்க விட்டு விட்டு பீர்பால் ஆண்டவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததை அவரால் சிறிதும் பொறுக்க முடியவில்லை.
அக்பர், மெதுவாக பீர்பாலை தொட்டு கூப்பிட்டார். 'எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைத்தால் சேகரித்துக் கொண்டு வாருங்கள், மந்திரியாரே' என்று கூறினார். ஆனால் பீர்பாலோ, 'என் வயிறுகூட வேண்டுமானால் உணவிற்கு ஏங்கலாம். ஆனால் என் உள்ளம் ராம நாமத்திற்காகத்தான் ஏங்குகிறது. எனக்கு உணவு வேண்டாம். என்னை விட்டு விடுங்கள்' என்று கூறினார்.
அரசருக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. நாட்டின் அரசர் என்கிற எண்ணம் கூட அல்லாது ஜெபத்தில் மூழ்கிய பீர்பாலை நாட்டிற்குச் சென்ற பின் தண்டித்துக் கொள்ளலாம் என்று எண்ணிய அரசர், 'உன் உதவி எனக்குத் தேவை இல்லை. நானே என் வயிற்றுப் பாட்டினை கவனித்துக் கொள்கிறேன்' என்று சத்தம் போட்டு விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
ஏதாவது இளைப்பாற இடம் கிடைக்குமா என்று நினைத்த அரசரின் எண்ணம் வீண் போகவில்லை. தொலைவில் ஒரு வீடு தென்பட்டது. நடையை துரிதப்படுத்தி அவ்விடம் அடைந்தார். இல்லம் தேடி வந்த சக்கரவர்த்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த அவ்வீட்டினர், அவருக்கு அறுசுவையான உணவினை அளித்து பசிப் பிணியைத் தீர்த்தனர்.
என்னதான் பீர்பாலின்மேல் கோபம் இருந்தாலும், அவர் காட்டில் உண்ண உணவு இன்றி ஜபம் செய்து கொண்டிருப்பதை எண்ணிக் கலங்கினார். தன் பொருட்டு வந்த பீர்பாலுக்காக அவர்களிடம் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டார்.
மீண்டும் வனத்தை அடைந்த அரசர், தான் கொண்டு வந்த உணவை பீர்பாலிடம் கொடுத்துப் புசிக்க வைத்தார். பீர்பாலும் வயிறு நிரம்ப உண்டு முடித்தார். அதற்காகவே காத்திருந்ததுபோல், அரசர், பீர்பாலிடம், 'நான் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் உமக்கு உணவு கிடைத்திருக்காது. நீங்கள் சொன்ன ராம நாமமா உங்களின் பசியை போக்கியது?' என்று கேட்டார்.
பீர்பால், கடகடவென்று சிரித்தார். 'அரசே ஒரு வேளை உணவிற்காக மகா பெரிய சக்கரவர்த்தியான நீங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்து விட்டது. ஆனால், என் பிரபுவான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியானவர், எனக்குத் தேவையான உணவினை இந்நாட்டு அரசரிடமே கொடுத்து அனுப்பி இருக்கிறார். இதுதான் அரசே ராம நாமத்தின் மகிமை. புரிந்து கொண்டீர்களா?' என்றார்.
அதற்கு மேல் அக்பருக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. வாயடைத்து நின்று விட்டார். ராம நாமத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. கலியுகத்தில் கூற வேண்டிய மந்திரமே ராம நாமம் தான்.
ஸ்ரீ' ராம ஜெயம்..! ஸ்ரீ ராம ஜெயம்..! நம்பியோருக்கு ஏது பயம்
அனுமனுக்கு இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 'அனுமன், அனுமார்' என்று வழங்குகிறோம். கர்நாடகாவில் 'ஐயா' என இணைத்து 'ஹனுமந்தையா' என்கின்றனர். ஆந்திராவில் 'அஞ்சனை மைந்தன்' என்னும் பொருளில் 'ஆஞ்சநேயலு' என்கின்றனர். மகாராஷ்டிராவில் வாயுதேவனின் மகன் என்பதால் 'மாருதி' என அழைக்கின்றனர். 'மாருதம்' என்பதற்கு 'காற்று' என பொருள். வட மாநிலங்களில் இவர் 'மகாவீரர்' எனப்படுகிறார். வீரதீரம் நிறைந்த இவரை மகாவீரர் என்பது பொருத்தம் தானே!
அள்ளித்தருவார் ஆஞ்சநேயர்:
நல்லபுத்தி, உடல்பலம், மன தைரியம், புகழ் ஆகியவை மனிதனுக்கு தேவையானவை. ஆனால் இவை நம் அனைவரிடமும் இருப்பது கடினம். அனுமனை வழிபடுவோருக்கு இந்த நற்பண்புகள் உண்டாகும் என ஆஞ்சநேயர் ஸ்லோகம் சொல்கிறது.
'புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத்!!'
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். புத்தி, உடல்வலிமை, புகழ், மன உறுதி, அஞ்சாநெஞ்சம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகிய அனைத்தும் அனுமனை மனதார வணங்கினால் நம்மை வந்தடையும்.''
நன்றி Mohan Visu