வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு பணம் சேர்க்குமா?

By தேஜஸ்

வெள்ளிக்கிழமை மதியம் 1 to 2 இந்த தீபம் ஏற்றுபவர்கள் என்றைக்கும் ஏழையாக மாட்டீங்க. வெறுமையாக இருக்கும் பீரோவில் விறுவிறுன்னு பணம் சேரும்.

இன்றைய கால சூழ்நிலையில் தங்கத்தின் விலை தான் விறுவிறுன்னு ஏறி உச்சத்தை தொட்டு நிற்கிறது. வருமானம் விறுவிறுன்னு குறைந்து போகிறது. இந்த சூழ்நிலையிலும் நம்முடைய வீட்டில் தங்க நகை சேர வேண்டும். பணத்திற்கு பஞ்சம் வரக்கூடாது. தன தானியங்கள் எல்லாம் நிறைவாக இருக்கும் வேண்டும். வீட்டில் ஆரோக்கியம் பெருக வேண்டும் என்றால், மகாலட்சுமியை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறை இந்த பதிவில் உங்களுக்காக.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், மகாலட்சுமி பூஜையை வீட்டில் செய்ய வேண்டும். மகாலட்சுமி முன்பு இரண்டு மண் அகல்விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். டைமண்ட் கற்கண்டுகள் பிரசாதமாக வைத்து விடுங்கள். ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரில் எடுத்து அதில் இரண்டே இரண்டு குங்குமப்பூவை போட்டு, பூஜையறையில் வைத்து விட வேண்டும்.
இந்த குங்குமப்பூ தீர்த்தம் தான் உங்களுக்கு பணத்தை லட்ச லட்சமாக ஈர்த்து பீரோவில் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. ஆகவே குங்குமப்பூ தீர்த்தத்தை தவறவிட வேண்டாம். மகாலட்சுமிக்கு வெள்ளை நிற மல்லிகை புஷ்பங்களால் அலங்காரம் செய்து, மணக்க மணக்க ஊதுவத்தி ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

கண்ணாடி டம்ளரில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, டம்ளர் வாய் பகுதியில் வலது உள்ளங்கையை மூடி, “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே வருக வருக” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி இந்த தீர்த்தத்தை பிரசாதமாக பருகிவிட வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த தீர்தத்தை குடிக்கலாம். தவறு கிடையாது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜை செய்துவிட்டு இந்த தீர்த்தத்தை குடிக்க குடிக்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகரிக்கும். தானாக வேலை செய்ய பணத்தை சம்பாதிக்க சுறுசுறுப்பாக ஓடி விடுவீர்கள்.

நிறைய பேருக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும். நாங்கள் வேலைக்கு செல்கின்றோம். வெள்ளிக்கிழமை மதிய நேரம் வீட்டில் இருக்க மாட்டோம் என்றால் என்ன செய்வது. வேறு வழி கிடையாது. வீட்டில் இருப்பவர்களை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள். மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யும் போது தான் பல மடங்கு பலன் நமக்கு கிடைக்கும்.

இந்த நேரத்தில் வழிபாடு செய்ய, வேறு வழியே இல்லை வீட்டை பூட்டி தான் வைத்திருப்போம். நாங்கள் எல்லோருமே வெளியில் இருப்போம் என்றால் வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த அதிசக்தி வாய்ந்த வழிபாட்டை ஒரே ஒரு வெள்ளிக்கிழமை செய்துவிட்டு லட்ச லட்சமாக கோடி கோடியாக சவரன் கணக்கில் பணம் கொட்ட வேண்டும் என்று நினைக்கவே கூடாது.

தொடர்ந்து 48 வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மொத்த கடனும் அடைவதற்கு உண்டான வழியை அந்த மகாலட்சுமி காட்டி கொடுப்பாள். வருமானம் பெறுவதற்கு உண்டான வழியை இந்த மகாலட்சுமி காட்டி கொடுப்பாள். சந்தோஷமாக நீங்கள் வாழ இந்த ஒரு எளிமையான வழிபாடு போதும். இதோடு சேர்த்து செவ்வாய்க்கிழமை என்றால் ஐந்து பேருக்கு உங்கள் கையால் நீர்மோர் தானம் கொடுங்கள். வீதியில் ரொம்பவும் தாகத்திற்கு கஷ்டப்படுபவர்களுக்கு இந்த தானத்தை செய்ய வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE