மந்திர புஷ்பம் பூஜை பலன்கள் என்ன?

By தேஜஸ்

இது ஆலய பூஜைகளில் அபிஷேகம், அலங்காரம், சோடச உபச்சார தீபாராதனை, சதுர் வேத பாராயணம் என அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு ஓதப்படும் ஸ்லோகம்......

யஜுர் வேதத்தின் தைத்திரீய ஆரண்யக பகுதியின் கீழ் இந்த மந்திரம் வருகிறது.

பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து உருகி நிற்பர்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு.

இந்த நீர் தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.
நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த மந்திரத்தின் வாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன.

இறைவனின் படைப்பில் உருவான இந்த இயற்கை சக்திகளை கொண்டு வழிபடுவது தான் இந்த மந்திரபுஷ்பத்தின் தனிச்சிறப்பு.
ஆப என்றால் தண்ணீர் என்று பொருள்.
யோ + ஆப + புஷ்பம் = யோபாம் புஷ்பம் என்று
அந்த மந்திரம் துவங்குகிறது.

திருப்பாற்கடலை கடையும் போது அந்த நீரில் இருந்து புஷ்பமாக எழுந்தவன் சந்திரன்.
அந்த சந்திரனை கொண்டு உம்மை வழிபடுகிறேன்.

இறைவன் இந்த உலகத்தை படைக்கும் காலத்தில் இந்த நீரில் இருந்து உருவானதே அக்னி.
ஆயதனம் என்றால் அடிப்படை ஆதாரம் என்று பொருள்.

அக்னிக்கு ஆயதனம் ஆப என்று அழைக்கப்படுகின்ற நீர், அந்த நீருக்கு ஆயதனம், அதாவது அடிப்படை அக்னி.

இவ்வாறு நீரும், நெருப்பும் ஒன்றுக்கொன்று ஆதார சக்தியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று அறிவியலை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது இந்த வேத மந்திரம்.

நீரில் இருந்தே வாயு தோன்றுகிறது.
இந்த வாயு எடுத்துச் செல்லும் நீர் திவலைகளே மேகங்கள்.
அப்படி என்றால் வாயுவிற்கு அடிப்படையாக நீரும், நீருக்கு ஆதாரமாக வாயுவும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுகிறது.

சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி உருவாவது மேகங்கள்.
இந்த மேகம் பொழிவிப்பதே மழை.

ஆக இந்த மழை நீருக்கு அடிப்படை சூரியன்,
சூரியனுக்கு ஆதாரம் நீர் என்றும்,
சந்திரன், நக்ஷத்திரங்கள், ஸம்வத்ஸரம் என்று அழைக்கப்படக் கூடிய காலத்தின் அளவுகள் அத்தனையும் நீர் என்ற ஆதார சக்தியுடனும்,
நீர் என்பது இத்தனை இயற்கை சிருஷ்டிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.

இறைவா, நீ சிருஷ்டித்த இந்த இயற்கையின் பிணைப்புகள் சரியான முறையில் இயங்கி இந்த மண்ணில் நீர்வளம் பெருக வேண்டும்,

அதனால் இப்பூவுலகில் ஜீவராசிகள் அனைத்தும் எவ்விதக் குறையும் இன்றி ராஜாதி ராஜன் ஆகிய குபேரனின் அனுக்ரஹத்தோடு,

அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழவேண்டும் என்பதே இந்த மந்திரபுஷ்பம் என்ற வேதமந்திர தொகுப்பின் பொருள்.

மந்திரம் எனும் தேனில் தோய்ந்த இம்மலர்களின் பொருளை அறியும் போது, நம் பிரார்த்தனைகளின் தொன்மை,

கவிதைத்துவமான அழகும், பொருளும் கொண்டதாகவும்,
இயற்கையை வணங்கி, அதனுடன் இணைந்து அதன் மடியில் தவழ்வதாகவும் இருக்கிறது.
“நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ஸ்னனன லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது;
கவிதையின் வேர் கிளைகளை பரப்பி, பிரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்;

மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று,

நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய் சொல்லி முடிக்கிறது.

ஒன்பதாவது சுலோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது.

செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது ஸ்லோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன.

யோ‌பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்தரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ அக்னேராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
அஸௌவை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ முஷ்யதபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோ‌ ப்ஸுனாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி
ஓம் தத்ப்ரஹ்ம
ஓம் தத்வாயு
ஓம் தத்அத்மா
ஓம் தத்ஸத்யம்
ஓம் தத்ஸர்வம்
ஓம் தத்புரோர் நம:
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே
ஸமேகா மான்கா மகாமாய மஹ்யம்
காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது
குபேராய வைஷ்ரவணாய
மஹாராஜாய நம.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE